நோக்கியா 8 கற்பனை வீடியோ வெளியானது. ஆனால் உண்மையில் இதுதானா?

NOKIA 8 PHONE CONCEPT
Gadgets

This Nokia 8 concept video. Nokia fan’s dream

ஸ்மார்ட்ஃபோன் கருவிகளை நோக்கியா பிராண்ட் பெயரில் தயாரிக்கும் உரிமையை எச்எம்டி க்ளோபல் நிறுவனம் (HMD Global) பெற்றுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி துவங்கவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் (mobile world congress 2017) நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் உள்ளது.

ஒருவழியாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வெளிவரவிருக்கும் சம்பவம் ஒருபக்கமிருக்க மறுபக்கம் நோக்கியாவின் தீவிர‌ ரசிகர்கள் அவரவர்களின் நோக்கியா கான்செப்ட் (கனவு / கர்ப்பனை உருவ) வடிவங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு வெளியாகியுள்ள‌ வடிவமைப்பானது நோக்கியாவின் வடிவமைப்பாளர்களையே வாய்பிளக்க வைக்கும் விதம் அமைந்துள்ளது.இந்த‌ நோக்கியா 8 கான்செப்ட் வீடியோ மற்றும் அது சார்ந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பற்றிய விபரம் கீழே.! வீடியோ பாருங்கள்

ஸ்கொயர் கார்னர் (சதுர‌ மூலை / boxed style / square corner nokia 8 phone )

கான்செப்ட் வீடியோவில் கருவியின் உலோக சட்டங்கள் ஸ்கொயர் கார்னர்களை கொண்டுள்ளதை காட்டுகிறது.

22.3 எம்பி ரியர் கேமரா (22.3-megapixel Carl Zeiss lens)

பின்புறத்தில் 22.3எம்பி ரியர் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது.

டிஸ்ப்ளே

நோக்கியா 8 கருவியின் டிஸ்ப்ளேவானது மிக மெல்லிய பெஸல்கள் கொண்ட ஒரு 5.7-அங்குல குவாட் எச்டி 1440பி டிஸ்ப்ளே ( 5.7-inch Quad HD Super AMOLED display) உடன் காட்சியில் தோன்றுகிறது.

அம்சங்கள்

இந்த கான்செப்ட் வீடியோவை வைத்துப் பார்த்தால் எச்எம்டி நிறுவனம், கருவியில் சில மாற்றங்களுடன் அறிமுகத்தை நிகழ்த்தலாம் என்று அறியப்படுகிறது. மேலும் இது இறுதி தயாரிப்பின் அம்சங்களைக் கொண்டது அல்ல எனவும் பல‌ வலைதளச் செய்திகள் அறிவிக்கின்றன‌. ஆனால் நிச்சயமாக சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மேலும் இரு பதிப்புகளில் இந்த ஃபோன் வெளியாகலாம் என‌ எதிபார்க்கபடுகின்றது. குவால்காம் ஸ்னாப் டிராகான் 835 சிப் (Qualcomm Snapdragon 835 chip) கொண்ட‌ ஒன்றும், மற்றொன்று ஸ்னாப் டிராகான் 821 சிப்புடனும் வருகின்றது. (Snapdragon 821). இவை முறையே 6GB, 4GB RAM றேம் கொண்டிருக்கும்.

நாள் : 10.02.2017 திருத்தம் : 11.02.2017
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE

புதியவை / Recent Articles