Nokia 3310 support LTE
Gadgets

NOKIA company is now preparing a new version of the Nokia 3310 which will support LTE.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE

நோக்கியாவின் பிரபல‌ மொபைல் ஃபோன் மாடல்களில் ஒன்றான Nokia 3310 கைப்பேசி சில வருடங்களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்ட‌ வசதிகளுடன் 2G வலையமைப்பில் செயற்படக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் கடந்த (2017) செப்டெம்பர் மாதமளவில் 3G வலையமைப்பிலும் செயற்படக்கூடிய வகையில் Nokia 3310 ஃபோனை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது (a new version of Nokia 3310 was released in September which worked on 3G networks ). இம்முறை கைப்பேசி அமெரிக்காவில் உள்ள AT&T மற்றும் T-Mobile ஆகிய நெட்வொர்க்குகளுக்கு துணைபுரியும் வகையில் உருவாக்கப்பட்டது.

இப்போது நோக்கியா நிறுவனம், நோக்கியா 3310 இன் புதிய பதிப்பை தயாரிக்கிறது போல் தெரிகிறது, இது LTE நெட்வர்க்கை ஆதரிக்கும் வகையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
முன்னதாக‌ புதிய நோக்கியா 3310 மாடல் ஆனது 17 வருடங்கள் கழித்து வெளிவந்த‌து. இது ஒரு மெலிதான, 2.4 அங்குல QVGA வண்ண டிஸ்பிளே, 2 மெகாபிக்சல் பின்புற கேமரா ஆகியவற்றுடன் அறிமுகமானது.

இந்த புதிய நோக்கியா 3310 எல்டீஇ (Nokia 3310 LTE ) வேறு எங்கும் வெளியிடப்படவிருக்கிறதா, இல்லையா என்பது தெரியவில்லை என்றாலும் குறிப்பாக அமெரிக்காவில் இது அறிமுகம் ஆக‌ உள்ளது.

Nokia 3310இன் புதிய பதிப்பு அறிமுகமாகும் திய‌தி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.