மோட்டோ இ6s (Moto E6s) ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் அறிமுகம்
பிரபல ஸ்மார்ட் ஃபோன் வடிவமைப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola) தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைபேசி ஒன்றினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Moto E6S எனப் பெயர்பெற்ற இந்த கைப்பேசியானது 6.1 அங்குல அளவுடையதும், 720x1560 பிக்ஸல் ரெஸொலூஷன் (Pixel Resolution) உடன் HD+ தொடுதிரையினைக் (touchscreen) கொண்டுள்ளது.
Moto E6S ஃபோன் முழு விபரங்கள்
டிஸ்பிளே (Display) |
6.10 இஞ்ச் (720x1560) |
பிராஸசர் (Processor) |
MediaTek Helio P22 |
பாட்டரி (Battery capacity) |
3000mAh |
இயக்குதளம் (ஓ யெஸ்> OS) |
அண்ட்ராய்டு 9.0 பை (Android 9.0 Pie) |
ரெஸலூஷன் (Resolution) |
720x1560 pixels |
றேம் (RAM) |
4GB |
Storage |
64GB |
பின்புற கேமரா (Rear Camera) |
13MP + 2MP |
முன்புற கேமரா (Front Camera) |
8 மெகா பிக்சல் (8-megapixel) |
அத்துடன் 2GHz MHz octa-core MediaTek Helio P22 பிராசஸர், பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன. microSD கார்டு உதவியுடன் சேமிப்பு நினைவகத்தினை 512GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் ( expanded via microSD card up to 512GB ) காணப்படுகின்றது.
மேலும் 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெராவையும் (8-megapixel camera on the front for selfies) பெற்றுள்ளது. இவற்றுடன் கைவிரல் அடையாள சென்சார் ( fingerprint sensor) , 3,000mAh பாட்டரி உடன், 155.60 x 73.06 x 8.60 மிமீ (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 149.70 கிராம் எடையையும் கொண்டுள்ளது. இது பாலிஷ் செய்யப்பட்ட கிராஃபைட் மற்றும் குருதிநெல்லி வண்ணங்களில் (Polished Graphite and Rich Cranberry colours) கிடைக்கும்.
Moto E6s ஸ்மார்ட் ஃபோன் விலை 7,999 இந்திய ரூபாய் ஆகும்.
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE |