பிளாக்பெர்ரி மெர்குரி, ஒரு நீண்ட எதிர்பார்ப்பு : அண்ட்ராய்டு மற்றும் QWERTY விசைப்பலகையுடன்

Blackberry Mercury Phone - Android QWERTY Phone
Gadgets

Blackberry Mercury with Android and QWERTY Keyboard launch on February 25,2017

ப்ளாக்பெர்ரி அதன் புதிய அண்ட்ராய்டு குவெர்டி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான‌ (Blackberry's Android QWERTY Smartphone) அழைப்புகளை அனுப்பி வருகின்றது - பிளாக்பெரி மெர்குரி (Blackberry Mercury) எனும் பெயரிடப்பட்டுள்ள‌ இந்த‌ ஸ்மார்ட்ஃபோன் விரைவில் வெளிவர‌ உள்ளது.

இந்த‌ கைபேசி அறிமுகம் ஆகும் போது வித்தியாசமான பெயராகவும் இருக்கலாம் என்றும் பிளாக்பெர்ரியின் விசைப்பலகையுடன் கூடிய‌ கடைசி போன் ஆகவும் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன‌.

இந்த‌ கைபேசியினை டிசிஎல் (TCL) நிறுவனம் வடிவமைத்து உற்பத்தி செய்து வருகின்றது. முன்னதாக‌ பிளாக்பெர்ரி, இனி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யப்போவதில்லை என்றும் மென்பொருள் மற்றும் மென்பருள் சேவைகளில் (software and software services) கவனம் செலுத்துவதாகவும் என‌ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் பிளாக்பெர்ரியின் அண்ட்ராய்டு செல்போன் ஆனது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற‌ மொபைல் வேல்ட் கான்ஃபெரன்சில் (Mobile World Conferrence) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இவ்வகையான‌ கைபேசிகள் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் முக்கிய சிறப்பம்சமானது : ஷார்ட்கர்ட்ஸ், ஒவ்வொரு கீயிலும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக‌ I பட்டனை க்ளிக் செய்தால் அது Instagram பயன்பாட்டிற்கு (மொபைல் ஆப் / Mobile App) நேரடியாக சென்று விட முடியும்.

இந்த மாடல் போன் 4.5 இன்ஞ் 1080 டிஸ்பிளேயுடன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 32 ஜிபி மெமரி, ஸ்னாப் டிராகான் 635 பிராசஸர், 3ஜிபி ரேமுடன் (Snapdragon 635 with 3GB RAM) கைரேகை மூலம் இயங்கும் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது.

4G தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செல்போனில் பின்னபக்க கமெரா 18 மெகா பிக்சலும், முன் பக்கம் 8 மெகா பிக்சலும் கொண்டு வெளிவரலாம் என‌ எதிபார்க்கப்படுகின்றது.
ப்ளாக்பெர்ரி மெர்குரி, அண்ட்ராய்டு 7 .1 நௌகட் இயங்குதளத்துடன் வெளியாக உள்ளது

நாள் : 27.02.2017 திருத்தம் : 27.02.2017
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE