வாட்ஸ்ஆப் வீடியோ கால் அனைவருக்கும் : அப்டேட் செய்து ட்ரை பண்ணுங்க‌ !

WhatsApp is bringing video call support to All. Earlier Beta version to public usable release candidate

கடந்த மாதம், வாட்ஸ்ஆப் அண்ட்ராய்டு (WhatsApp Android) பயன்பாட்டில் வீடியோ அழைப்புக்கு ஆதரவளிக்கின்ற‌ பீட்டா வெர்ஷனை உருவாக்கி அறிமுகப்படுத்தியது. பீட்டா வெர்ஷன் (Beta Version) கட்டுரையைப் பாருங்கள். இப்போது வாட்ஸ்ஆப் வீடியோ கால் வசதி (WhatsApp Video Calling feature) அனைவரின் பயன்பாட்டிற்காகவும் வெளியிடப்பட்டுள்ளது : Android, iOS மற்றும் விண்டோஸ் ஃபோன்களில் வீடியோ கால் செய்வதற்கு முதலில் உங்கள் வாட்ஸ்ஆப் பயன்பாட்டை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

பேஸ்புக் மெசஞ்சர் (Facebook Messenger) மற்றும் லைன் (Line) போன்ற மெசஞ்சர் ஆப்களுக்கு (Messaging Apps) இடையேயான‌ போட்டியில் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலும் இணையான‌ சேவைகளை வழங்குவதிலும் வாட்ஸ்ஆப் நெருக்கமாக‌ (நெருங்கி வருகிறது) உள்ளது. வாட்ஸப் சமீபத்தில் iOS தளத்தில் GIF படங்களுக்கான‌ ஆதரவைச் (WhatsApp supports GIF images) சேர்த்துள்ளது. இந்த‌ வசதியால் நீங்கள் ப‌டங்களை பகிர்ந்து கொள்ளும்போது Snapchat-போன்று (Snapchat-like feature) படம் மீது வரைய அல்லது 'ஸ்டேடஸ் இல்' ஸ்டிக்கர்களாக‌ (add stickers in whatsapp status) சேர்க்க முடியும்.

சிறு தாமதம் இருந்தாலும் உலகம் முழுக்க‌ ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆர்வலர்களைக் கொண்ட‌ வாட்ஸ்ஆப்பின் வீடியோ காலிங் வசதி பயனர் அடிப்படையில், பெரிய செய்தியாகும். வீடியோ அழைப்பு அம்சம் உலகளவில் அடுத்த சில நாட்களில் கிடைக்கப்பெறும்.

நாள் : 15.11.2016 திருத்தம் : 15.11.2016

புதியவை / Recent Articles