உணவு

Uber's, UberEATS food delivery service launch in India

கேப் வண்டிகள் ஒருங்கிணைப்பாளரான‌ உபர் (Cab Aggregator Uber), UberEATS எனும் முழுமையான மற்றும் தேவைக்கேற்ப‌ உணவு விநியோகம் செய்யும் பயன்பாட்டை (food delivery service app) இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

உபர் நிறுவனம் தற்போது அதன் பயனர்ளிடம் தங்கள் நகரில் தங்களுக்கு பிடித்த உணவகங்களைப் பட்டியலிடவும் (list their favorite dishes from nearby restaurants) உள்ளீடு செய்யவும் கேட்டு வருகிறது.

UberEATS மூலம் உபர் நிறுவனம் தற்போது உணவு விநியோக‌ சேவைதனை வழங்கி வரும் மற்ற‌ நிறுவனங்களான‌ Foodpanda (ஃபூட் பாண்டா), Swiggy (சுவிக்கி), Zomato (ஸொமேட்டோ) உடன் போட்டியில் குதிக்க‌ உள்ளது.

இதேபோல், உபர் போட்டியாளரான‌ ஓலா மார்ச் 2015 இல் OlaCafe என்று அதன் உணவு விநியோக சேவையைத் துவங்கியது. மார்ச் 2016-ம் ஆண்டில், உணவு விநியோக சேவையை வழங்கி வரும் முண்ணணி நிறுவனங்களுடன் ஈடுகொடுக்க‌ முடியாததால், ஓலா அப்பயன்பாட்டை நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

UberEATS, ஆம்ஸ்டர்டாம், பிரஸ்ஸல்ஸ், துபாய், ஹாங்காங், ஜோகன்னஸ்பர்க், லண்டன், லியோன், சிங்கப்பூர், ஸ்டாக்ஹோம், தைப்பே, டோக்கியோ, மிலான், பாரிஸ், வியன்னா, மற்றும் அமெரிக்க, ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளின் பல நகரங்களில் தற்போது கிடைக்கிறது.

எனினும், உபர் எந்த இந்திய நகரத்தினை முதல் இலக்காகக் கொண்டுள்ளது என‌ தெளிவாக தெரியவில்லை. பயன்பாடு (மொபைல் ஆப்) அடிப்படையில், ஏனைய‌ உணவு விநியோக பயன்பாட்டைப் போல் செயல்படுகிறது. அருகிலுள்ள உணவகங்களில் கிடைக்கப்பெறும் உணவு பட்டியல் / மெனுக்களில் இருந்து தேர்வு செய்து பயனர்கள் ஆன்லைனில் ஆர்டர்செய்து பணம் செலுத்த முடியும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.