எல்லாத்துக்கும் ஒரு ஆப் (App) இருக்கு. இதுக்கும்தான் ???

YO Sperm Test
Gadgets

Sperm test via smartphone using an app called YO Sperm Test

எல்லாத்துக்கும் ஒரு ஆப் (App) இருக்கு. இதுக்கும்தான் ??? விந்தணு சோதனைக்கும்தான் (sperm test via smartphone).

ஒரு புதிய தயாரிப்பு, 'YO Sperm Test / யோ விந்தணு டெஸ்ட். கிளினிக்குகளுக்குச் சென்று வெளிப்படையாக‌ விந்தணு சோதனைச் செய்வதை தவிர்க்க உதவுகிறது இந்த‌ கைபேசி பயன்பாடு (Mobile App). இந்த‌ மொபைல் ஆப் பயன்படுத்தி விந்தணு நகரும் விகிதம், அசைவு மற்றும் எண்ணிக்கையினை உங்கள் வீட்டில் இருந்தபடியே சோதனை செய்யலாம். இந்த‌ 'YO Sperm Test' விந்தணு சோதனை கிட் (Testing Kit) ஒரு சிறு நுண்ணோக்கி (mini-microscope) பயன்படுத்துகிறது. அதனை உங்கள் ஸ்மார்ட்போனில் மாட்டி விட்டால் (clip it to your smartphone and start sperm testing) சோதனையினை எளிதில் செய்து முடித்து விடலாம். விந்துவின் அசைவையும் கைபேசி திரையில் பார்க்கலாம்.

இக்கருவியானது விந்து பகுப்பாய்விற்கென‌ வணிக ரீதியாலான தர தீர்வுடன் உருவாக்கப்பட்டது, மற்றும் 97 சதவீதம் துல்லியமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. FDA ஒப்புதலும் பெற்றதாகும். ஜனவரி 1 வெளியீடாகும் இந்த‌ கருவியை இணையதளத்திற்குச் சென்று $ 50க்கு முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.


நாள் : 03.12.2016 திருத்தம் : 09.12.2016