Snapchat Snap Games
Gadgets

Snap Games, the new gaming feature lets You Play Games on Snapchat

ஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என அழைக்கப்படுகிறது. Snapchat பயனர்கள் பயன்பாட்டை விட்டு செல்லாமல் தங்கள் நண்பர்களுடன் விளையாடி மகிழ‌ அனுமதிக்கிறது. மூன்றாம் தரப்பு டெவலப்பர்களிடமிருந்து (third-party developers) அசல் விளையாட்டுக்களையும், பிரபலாமான‌ விளையாட்டுக்களையும் ஆன்லைனில் விளையாடி மகிழ முடியும்.

டிக்-டாக் செயலிக்கு தடை (Ban Tiktok)

இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற‌ செயலிகளின் புதுப் பொலிவும், புது அம்சங்களின் அறிமுகத்தாலும் ஸ்னாப்சாட் திணறி வருகிறது. இதனால் பல‌ பயனர்களை இழந்தும் வருகிறது. எனவே வரும் மாதங்களில் Snapchat புதிய அம்சங்களின் அறிமுகத்தினை தொடங்குவதை நாம் எதிர்பார்க்கலாம். Snap Games இதற்கு முதற்படியாக‌ உள்ளது.

Snapchat, ஸ்னாப் விளையாட்டுகளை "மொபைல் கேம்கள், நண்பர்களுக்காக‌ தயாரிக்கப்பட்டது" என அழகான விளக்கம் அளித்துள்ள‌து. ஸ்னாப் கேம்ஸ் விளையாட்டுகள் Snapchat பயன்பாட்டில் இருந்து இயக்கப்படும் மொபைல் கேம்ஸ் ஆகும். எந்த நிறுவல்களும் தேவை இல்லை. கேம்கள் அனைத்தும் HTML5 பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

பிரபல சாட்டிங் அப்பிளிக்கேஷனான (Chat App) ஸ்னாப் சாட்டில், கேமிங் பிளாட்போஃர்ம் இதுவரையிலும் பரிசேதனை முயற்சியில் காணப்பட்டது. தற்போது அதிகார‌பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Snap Games எனப்படும் இவ் வசதி சாட் பாரில் தரப்பட்டுள்ளது. இதனை செயற்படுத்துவதற்கு எந்தவிதமான புது செயலி (அ) அப்பிளிக்கேஷன்களையும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.