ஆப்பிளின் சிரி பணம் அனுப்ப மற்றும் பெற பேபால் வழியாக‌ உதவுகிறது

paypal-send-receive-money-with-apple-siri
பணம் முதலீடு

Now Siri helps you to send and receive money through PayPal

பேபால் (Paypal)ஆப்பிளின் ஆப் ஸ்டோர் (Apple's App Store) வழியாக iOS வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டு (Mobile App Update) மேம்படுத்தலில் இறங்கியுள்ளது. இந்த‌ மேம்படுத்தலை பயன்படுத்தி இரு பயனர்களுக்கிடையே பணம் அனுப்ப மற்றும் கேட்டுப்பெற (App helps to send and receive Money) முடியும். உங்களது ஐ ஃபோனில் சிரி (iPhone's Siri Assistant feature) பயன்படுத்தி பேபால் வ‌ழியாக‌ (simply open up Siri and send/ receive money through PayPal) 30 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்ப‌ மற்றும் பெறுவதற்கான வ‌சதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‌து. இந்த‌ நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும் என்பது குறிபிடத்தக்கது.
.

உங்களின் ஐபோன் (iPhone) மற்றும் ஐபேட்களில் (iPad) உள்ள ஆப்பிளின் சிரி - இன்டலிஜென்ட் அசிஸ்டண்ட் (intelligent personal assistant) ஊடாக விரும்புவர்களுக்கு பணம் அனுப்பிக்கொள்ள முடியும். நீங்கள் சிரியை ஓப்பன் செய்து அதனிடம் இவ்வாறு கூறவும் "Send $100 to Krishna using PayPal,” or “Request $20 from Ram using PayPal for the Party last night.” (நம்மூரில் நீங்களே சோதனைச் செய்யுங்களேன். என்னிடம் ஐபோன் கிடையாது.)

அறிமுகம் செய்யப்பட்ட‌ 30 நாடுகளில் பட்டியல்

ஆஸ்திரேலியா
ஆஸ்திரியா
பெல்ஜியம் (பிரஞ்சு மற்றும் டச்சு)
பிரேசில்
கனடா (ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு)
சீனா
டென்மார்க்
பின்லாந்து (பின்னிஷ்)
பிரான்ஸ்
ஜெர்மனி
ஹாங்காங் (கேண்ட்டோனீஸ்)
இந்தியா
இஸ்ரேல் (ஹீப்ரு)
இத்தாலி
ஜப்பான்
மலேஷியா (மலாய்)
மெக்ஸிக்கோ
நெதர்லாந்து
நியூசீலாந்து
நார்வே
ரஷ்யா
சவுதி அரேபியா (அரபு)
சிங்கப்பூர் (ஆங்கிலம்)
ஸ்பெயின்
ஸ்வீடன்
சுவிச்சர்லாந்து (பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் இத்தாலிய)
தாய்லாந்து
ஐக்கிய ராஜ்யம் (இங்கிலாந்து)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அரபு)
ஐக்கிய அமெரிக்கா

எஞ்சியுள்ள‌ பிற‌ நாடுகளிலும் விரைவில் இந்த‌ காகிதமற்ற‌ பண‌ பரிமாற்றம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாள் : 12.11.2016 திருத்தம் : 12.11.2016