கூஃகுளின் புதிய ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு; பழைய‌ ஃபோட்டோக்களை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

Google-Photoscan-App
Gadgets

Picture perfect and glare free Photo scanning app from Google for Old photo prints

கூகுளின் புதிய ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு (Google's new PhotoScan app) பிரின்ட் (அச்சு) செய்யப்பட்ட‌ பழைய ஃபோட்டோக்களை (புகைப்படங்களை) டிஜிட்டலைஸ் செய்வதற்கு எளிதில் உதவுகிறது (digitize old photo prints easily).

கூஃகுள் போட்டோஸ் (Google Photos app) உங்களது அனைத்து புகைப்பட‌ங்களையும் கிளவுட் செர்வர்களில் சேமித்து (Save in Cloud servers), எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற‌ நோக்கத்தோடு துவங்கப்பட்டதாகும். ஆனால் நம்மிடம் இருக்கின்ற‌ பல்லாயிரக்கணக்கான‌ அச்சிடப்பட்ட‌ பழைய‌ ஃபோட்டோக்களை என்ன‌ செய்வது? . இவற்றை மின்னணு படங்கள் (digital photographs) ஆக்குவது எளிதான‌ செயல் அல்ல‌ !!.

இப்போது உங்களது பழைய‌ பிரிண்ட் செய்யப்பட்ட‌ ஃபோடோக்களை உண்மையில் புதுப்பித்துக்கொல்ளலாம் (Restore Old printed photographs using Google PhotoScan App). பழைய‌ போட்டோக்களை நொடிகளில், எளிதில் ஸ்கேனிங் செய்து வேலையை எளிதில் முடித்துக் கொள்ளும் கூஃகுள் இன் புதிய ஃபோட்டோ ஸ்கேன் ( Google PhotoScan ) பயன்பாட்டிற்கு ஒரு நன்றி கூறலாம்.

முன்னரே நாம் முயற்சி செய்து பார்த்திருப்போம்..... ஆம் பழைய‌ ஃபோட்டோவை மொபைல் கேமாராவில் படம்பிடித்திருப்போம். ஆனால் அப்போதெல்லாம் ஒரு கூசொளி வெளிச்சமோ (glare lights in photos) அல்லது நிழலோ புகைப்படத்தில் பதிந்திருக்கும். கூகுளின் ஃபோட்டோ ஸ்கேன் பயன்பாடு (Google's new PhotoScan) படங்களில் இயந்திர கற்றல் பயன்படுத்தி (Photoscan app from google use machine learning) இந்த சிக்கல்களை புறக்கணிக்கின்றது.

Google PhotoScan எப்படி வேலை செய்கிறது ?

உங்களது கைபேசியில் (ஸ்மார்ட்ஃபோன்) பழைய‌ ஃபோட்டோக்களை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். ஸ்கேன் செய்யப்படும் ஃபோட்டோ மங்கலாக‌ இல்லாதிருக்க‌ (wont be blurry) சில‌ பொறிக்கற்றல் தந்திரங்களை Google PhotoScan கையாளுகின்றது.

ஒரு பனோரமா (Panorama) அல்லது ஸ்ட்ரீட் வியூ படத்தை (Streetview) பிடிப்பதைப்போன்ற‌ - செயல்முறை. ஃபோட்டோஸ்கேன் பயன்பாட்டை திறந்து அச்சு மீது (பழைய‌ ஃபோட்டொ பிரின்ட்) மீது ஃபோனை பிடித்துக் கொள்ளுங்கள், பின்னர் அச்சு மேலே காண்பிக்கப்படும் நான்கு புள்ளிகளை அணிசேர்த்து படமாக்குங்கள். சில‌ நேரம் தவறாக‌ புகைப்படம் ந‌றுக்க பட்டுவிட்டால், ஆப்பில் நீங்கள் படத்தின் நறுங்கிய‌ பகுதியை சரிசெய்ய முடியும்.

தற்போது அறிமுகமாகும் பதிப்பில் புகைப்படங்கள் குறிப்பாக உயர் தெளிவுதிறன் கொண்டதாக‌ (high-resolution photos) இருக்காது, என கூஃகுள் கூறுகிறது. சிறிய 6 X 4 அளவிலான‌ புகைப்படங்கள் 3-6 மெகா பிக்சல்களில் (3-4 mega pixels) தான் பயன்பாட்டில் படம்பிடிக்கப்படுகிறது. ஆனால் தரமான போன் கேமராவின் தெளிவுதிறன் (depend on camera's resolution) பொறுத்தது. காலப்போக்கில் பிக்ஸல்களின் அள‌வினை அதிகரிக்க முடியும்.

PhotoScan அண்ட்ராய்டு மற்றும் iOS போன்களுக்காக‌ (நவம்பர் 15.2016) வெளியிடப்பட்டுள்ளது . பயன்படுத்தி முயற்சி செய்ய‌ கீழ்க்காணும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

நாள் : 15.11.2016 திருத்தம் : 17.11.2016