கூகிள் தனியுரிமை கொள்கைகள் இல்லாத‌ பயன்பாடுகளை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க உள்ளது: அறிக்கை

Android Privacy Policy
Software

Google to remove apps without privacy policies from its Play Store

கூஃகுள் (Google) அதன் டெவலப்பர்களிடம் நிறுவனத்தின் பயனர் தரவு கொள்கையை மீறினால், பிளே ஸ்டோர் (Play Store) இல் இருந்து பயன்பாடுகள் நீக்கப்படும் என்றும் அல்லது 'தெரிவுநிலை குறைக்கப்படும்' என்றும் தனது நோக்கங்களை அறிவித்து வருகிறது. இது தனியுரிமை கொள்கை இல்லாத (apps without privacy policy) அனைத்து பயன்பாடுகளுக்கும் பொருந்தும்.

ஆப் உருவாக்குநர்கள் (Developers) ஆப் ஸ்டோர் பக்கத்தில் சரியான தனியுரிமை கொள்கைக்கான‌ ஒரு இணைப்பை சேர்த்துக்கொள்வதன் மூலமும் மற்றும் ஆப்பின் உள்ளே இந்த‌ கொள்கையினை சேர்த்துக்கொண்டான் இதனைச் சரிசெய்ய முடியும்.

இந்த‌ தனியுரிமை கொள்கைக்கான‌ தேவை பூர்த்தியானது மார்ச் 15, 2017க்குள் சரிசெய்துகொள்ள‌ வேண்டும். இதனை பூர்த்திசெய்யாத‌ ஆப்கள் / பயன்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ( action against offending apps) என‌ கூஃகுள் அறிவித்துள்ளது. கூஃகுளின் (Google) இந்த முக்கியமான நடவடிக்கையானது குறிப்பிட்ட‌ ஒரு ஆப் (Mobile App) பயனர் கைபேசியில் இருந்து பல்வேறு அனுமதிகள் கேட்கும் போது தனியுரிமைகளை தெரிந்துகொண்டு தேவையில்லாத‌ ஆப்களை புறக்கணித்து கட்டுப்படுத்த உதவும்.

கூகுள் தொடர்ந்து டெவலப்பர்களுக்கு (Restrictions for Android App developers) பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதை புறக்கணிக்கும் பயன்பாடுகள் / ஆப்கள் கூஃகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இடைநீக்கம் (Google Play Store suspension) செய்யப்படும்.

நாள் : 09.02.2017 திருத்தம் : 10.02.2017

புதியவை / Recent Articles