பேஸ்புக் தொடர்ச்சியாக‌ ஸ்னாப்சாட் போன்ற அம்சங்களை மேலும் வெளியிட்டு வருகின்றது

Facebook Camera app feature
Gadgets

Facebook has announced the roll-out of an feature called Facebook Camera with Snapchat like effects

இரண்டு புதிய‌ உருவங்களில் எஃபக்ட்களை மொபைல் ஃபோனில் பகிர்ந்து கொள்வதற்கு, பேஸ்புக், பேஸ்புக் கேமரா எனும் ஒரு புதிய‌ வசதியை அறிவித்துள்ளது. இந்த புதிய கேமரா வசதியை பயன்படுத்தி முகமூடிகள், எதிர்வினை விளைவுகள், பிரேம்கள் மற்றும் ஊடாடும் வடிகட்டிகள் என‌ விசேஷமான‌ எஃபக்ட்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பயன்படுத்த முடியும்.

டக்ளஸ் கூப்லேண்ட் மற்றும் ஹேட்டி ஸ்டீவர்ட் போன்ற ( Douglas Coupland and Hattie Stewart ) கலைஞர்களின் சித்திரங்களுடன் கூடிய‌ கலை ஆக்கமிக்க எஃபக்ட்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வலைப்பதிவில், வரவிருக்கும் திரைப்படங்களான‌ ஏலியன் கோவெனன்ட், டெஸ்பிக்கபிள் மீ, கேலக்ஸீ 2ம் பகுதி, பவர் ரேஞ்சர்ஸ், ஸ்மர்ப்ஸ், வொண்டர் உமன் ஆகிய‌ படங்களுக்கு (movies Alien: Covenant, Despicable Me 3, Guardians of the Galaxy Vol. 2, Power Rangers, Smurfs: The Lost Village and Wonder Woman ) முகமூடிகளை உருவாக்கவும் கூட்டு சேர்ந்துள்ளதாக‌ குறிப்பிட்டுள்ளது.

நாள் : 29.03.2017 திருத்தம் : 29.03.2017