டிராப்பாக்ஸ்சில் ஃபோல்டர்களை டவுண்லோடு செய்ய‌ முடியும்

Dropbox paid users can download folders for offline use soon

டிராப்பாக்ஸ்சில் (Dropbox ) இப்போது நீங்கள் ஃபோல்டர்களையும் டவுண்லோடு செய்து ஆஃப்லைனில் பயன்படுத்திக்கொள்ள‌ முடியும் (Download folder for offline use). டிராப்பாக்ஸ் இன் இந்த‌ புதிய‌ மேம்படுத்தல் வெகுவில் வருகிறது: நீங்கள் ஒரு முழு ஃபோல்டரையே டவுண்லோடு செய்ய‌ முடியும்.

இந்த‌ வசதி கட்ட‌ண பயனர்களுக்கு (paid Dropbox users only) மட்டுமே கிடைக்கும் - அதாவது, புரோ (Pro), பிசினெஸ் (Business) மற்றும் எண்டர்பிரைஸ் (Enterprise) சந்தாதாரர்களுக்கு. குறைந்த வேகமுடைய‌ இன்டர்னெட் இணைப்புகளில் வேலை செய்ய இந்த‌ அம்சம் அனுமதிக்கும்.

மேலும் நீங்கள், ஆஃப்லைன் பயன்பாட்டிற்கு (Offline use) தேவையான‌ பதிவுகளை Wi-Fiஇல் இருக்கும் போது பின்னர் டவுண்லோடு செய்ய‌ தேர்வு செய்தால், உங்களுக்கு சில டேட்டா செலவுகளைச் சேமிக்கவும் முடியும்.

ஒரு ஃபோல்டரை டவுண்லோடு (Folder download) செய்வதற்கு (கோப்புறையை பதிவிறக்க), நீங்கள் வெறுமனே டிராப்பாக்ஸ் பயன்பாட்டிலுள்ள‌ தேவையான‌ ஃபோல்டரை கைபேசித் திரையில் பார்த்து, அதன் வலதோரத்திலிருக்கும் டவுண்லோடுக்கான‌ கீழ்நோக்கு அம்புக்குறியினைத் தட்டி (tap downward arrow to download), அதை ஆஃப்லைனில் கிடைக்கச் செய்வதற்கு மாற்றிக்கொள்ளுங்கள். மேலே காணப்படும் படத்தினைப் பார்க்கவும். பின்னர் அதை மெயின் மெனுவில் உள்ள‌ ஆஃப்லைன் பகுதியில் (Offline section) பட்டியலிடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

ஏதாவது மாற்றங்கள் செய்திருந்தால் நீங்கள் அடுத்த முறை ஆன்லைனில் இருக்கும் போது சிங்க் செய்யப்படும் (Sync / ஒத்திசைக்கப்படும்).

புது அம்சம் "அடுத்த சில நாட்களில்." iOS மற்றும் அண்ட்ராய்டு டிராப்பாக்ஸ் (Android & iOS Dropbox) புரோ மற்றும் பிசினஸ் பயனர்களுக்கு வந்தடையும்.

நாள் : 07.12.2016 திருத்தம் : 07.12.2016

புதியவை / Recent Articles