Facebook Messenger Dark Mode feature
Gadgets

Facebook Adds 'Dark Mode' to Regular Messenger Settings

பேஸ்புக் நிறுவனம் அதன் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை (Facebook Messenger App Dark Mode Feature) அறிமுகம் செய்துள்ளது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனையானது கடந்த ஆண்டு முதல் செய்யப்பட்டு வந்தது.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பினை ஃபேஸ்புக் வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த அம்சம் இந்தியா உள்பட பல உலக நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது.

டார்க் மோட் வசதியின் நன்மை

டார்க் மோட் ஸ்கிரீன் ஆனது வித்தியாசமான திரை பயன்பாடு மட்டுமல்லாமல் ஆரோக்கிய நலன்களையும் கொண்டிருக்கிறது, அது குறைந்த அளவில் நீல நிற வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் கண்ணிற்கு குளிர்ச்சியும் இரவில் பயன்படுத்தும் போது தூக்க முறையில் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யவதற்கு மெசஞ்சர் திரையின் மேல்புறத்தில் காணப்படும் ப்ரோஃபைல் (profile picture) புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் காணப்படும்
டார்க் மோட் ஆப்ஷனை (பிறை நிலா படத்துடன் "Dark Mode" என காணப்படும்) (Dark mode option toggle button) க்ளிக் செய்ததும் திரை கருப்பாய் மாறும்.

எழுத்துக்களும் படங்களும் தெளிவாகத் தெரியும். இயல்பு நிலைக்குத் திரும்ப "Dark Mode" ஆப்ஷனை கிளிக் செய்யவும் (இடதுபக்கம் தெரிவு). இப்போது திரை வெள்ளையாக மாறி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.