A mobile phone app for detection of a kidney condition
Gadgets

A mobile phone app for detection of a kidney condition in hospital patients

கடுமையான சிறுநீரக காயமானது (Acute kidney injury) கடுமையான சுகாதார நிலைமைகளால் ஏற்படுகிறது, செப்சிஸ் உள்ளிட்ட தொற்றும் கூட‌, மேலும் இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரை பாதிக்கிறது. வயதான நோயாளிகளுக்கு இந்த நிலையானது மிகவும் பொதுவானது. விரைவாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.

கூஃகுள் டீப் மைண்ட்

சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு டீப் மைண்ட் செயற்கை நுண்ணறிவு மூலம் கணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென‌ கூகுளின் ஆல்ஃபபெட்(Alphabet) செயற்கை நுண்ணறிவு ஆய்வகமான டீப் மைண்ட்(DeepMind) ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளது. டீப் மைண்ட், கடுமையான சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கணிக்க முடியும் என்று கூகுள் கூறியுள்ளது.

சிறுநீரகம் மிகவும் மோசமாக பாதிக்கபடுவதில் இருந்து பாதுகாக்க இந்த செயற்கை நுண்ணறிவு (Artifcial Intelligence) கருவி உதவுகிறது. இதன் உதவியுடன் சராசரியாக 14 நிமிட நேரத்தில் சிறுநீரகத்தின் நிலையை துல்லியமாக கண்டறிய முடியும்.

ஐக்கிய இராச்சியத்தின் இராயல் ஃப்ரீ (Royal Free) மருத்துவமனையில் இந்த அப்பிளிக்கேஷன் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது.

முறையான இடைவெளியில் சிறுநீரகத்தை பரிசோதித்து வருவதால் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். டயாலிசிஸ் தேவைப்படும் அளவுக்கு மோசமடைந்த 10 நோயாளிகளில் 9 பேரை இதுவரை இந்த கருவி அடையாளம் கண்டுள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.