Dentist Playing with teeth
ஆரோக்கியம்

Vaccine Developed that could prevent tooth decay

பற்சிதைவிலிருந்து (tooth decay) பாதுகாப்பினை அளிக்கக்கூடிய தடுப்பு மருந்து ஒன்று மட்டும் இருந்தால் போதும், ஆகா ... பல் மருத்துவரை பார்ப்பதற்கான‌ வாய்ப்புகளைதவிர்த்து விடலாம் என்கின்ற‌ எண்ணம் அனைவருக்குமே உண்டு. இது சாத்தியமாயிற்று . விரைவில் இந்த‌ பற்சிதைவு மருந்து அனைவரையும் வந்து சேரும். சீன ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட‌ பற்சிதைவுக்கான‌ தடுப்பு மருந்து பற்சிதைவிலிருந்து பாதுகாப்பினை அளிக்கக்கூடியதாகும்.

பற்சிதைவைத் தடுக்கும் தடுப்பூசி (Vaccine for Tooth Decay)

நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்ட அசிட் காரணமாக பல்லின் சிதைவு அல்லது குழி (dental caries / tooth decay or cavities) ஆகியவற்றினை இந்த‌ தடுப்பூசி மருந்தினால் தடுத்து நிறுத்தலாம். பற்களை பல்சொத்தையிலிருந்து பாதுகாக்க‌ வைக்கும் இந்த‌ தடுப்பூசி சீன மருத்துவ அகாடமியின் (Chinese Academy of Sciences) வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைரஸ் (Wuhan Institute of Virology / WIOV) ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Streptococcus mutans எனும் பக்டீரியாக்கள் ஏற்படுத்தும் ஆசிட்கள் மூலம் பற்களில் ஏற்படக்கூடிய துவாரங்களைத் தடுத்தும் மற்றும் பற்கல் சொத்தையாவதையும் தடுக்க முடியும். ஆராய்ச்சியாளர்கள் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் உயர் பாதுகாப்பு திறன் படைத்த‌ தடுப்பூசியினை (developed a low side effects and high protective efficiency vaccine) உருவாக்கியுள்ளனர் என‌ ஆய்வுகள் தெரிவிக்கின்றன‌.

எலிகளில் பரீட்சிக்கப்பட்டுள்ள குறித்த தடுப்பு மருந்தானது 64.2% துல்லியமான செயல்திறன் அளித்துள்ளதாக‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முந்தைய ஆய்வு வெற்றிகள் இருந்தாலும், தடுப்பூசி பலகட்டங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட‌ பிறகே அதன் இறுதி பதிப்பானது மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கு வழங்கப்படும்.

திட்டப்படி சென்றால், உடனடியாக பற்சிதைவுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் தடுப்பூசியினை விரைவில் அனைவரும் (vaccine that protects against tooth decay) பெறலாம் எனத் தெரிய‌ வருகிறது.