கண்ணை இருமுறை சிமிட்டுங்கள் ; கண்ணில் தெரியும் காட்சி ஸூம் : புதிய காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கம்
அறிவியலும் தொழில்நுட்பமும் விரைவாக வளர்கினறன, எதிர்காலத்தில், பணியிடத்தில் மனிதர்களின் தேவை இருக்காது என்றோர் சிந்தனைத்துளியையும் நம்ப வைக்கின்றது. மற்றொரு அறிவியல் கண்டுபிடிப்பு பிரமிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கண் பார்வை தொடர்புடையது.பார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகூட்டவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டிருந்தன. தற்போது கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.
கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள் பெரிதாக்கப்படும். மீண்டும் இருமுறை மூடித் திறக்கும்போது காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும். ஆகாஹா. என்ன கண்டுபிடிப்பு. விஞ்ஞானம் மனித உறுப்புகளையும் ஆக்கிரமித்து, உடலில் சேர்த்துக்கொண்டு இயந்திரமாய் மாற்றும் காலமடா சாமி !!!!.
கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் காண்டாக்ட் லென்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர், இதனில் நீங்கள் இரண்டு முறை சிமிட்டும்போது பார்வைவினை பெரிதாக்கலாம் - உண்மையில் எதிர்காலம் இங்கே இருக்கிறது எனும் எண்ணத்தினை நிரூபிக்கிறது.
கண் அசைவுகளால் கட்டுப்படுத்தப்படும் லென்ஸை உருவாக்கியுள்ளனர். நீங்கள் எங்கு பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, கண்ணின் அசைவினை வைத்து இடது, வலது, மேல், கீழ் பக்கமாக நகரும். உங்கள் சொந்த கேமரா லென்ஸை உருவாக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு முறை கண்ணை சிமிட்டுவதுதான்.