உலகின் மிகச்சிறிய இமேஜ் சென்சார் !! கின்னஸ் உலக சாதனை படைத்தது OmniVision
மேம்பட்ட டிஜிட்டல் இமேஜிங் தயாரிப்புக்களை (advanced digital imaging solutions) வழங்கி வரும் ஆம்னிவிஷன் (OmniVision), அதன் OV6948 பட சென்சாரினை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
OmniVision, OV6948 சென்சாருடன், கேமரா கியூப்ஷிப் (CameraCubeChip) எனப்படும் சென்சார் அடிப்படையிலான கேமரா தொகுதி (camera module) உருவாக்கப்படுவதையும் நிறுவனம் அறிவித்தது.
120 டிகிரி பார்வைக் கோணத்தைக் கொண்ட இக் கேமரா சென்சார் ஆனது 3 மில்லி மீட்டர் முதல் 30 மில்லி மீட்டர் வரையிலான குவியத்தூரத்தினை (focus range of three to 30 mm) உடையதாகவும் காணப்படுகின்றது.
ஆம்னிவிஷன், தற்போது உலகின் மிகச்சிறிய பட சென்சார் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஒருவரின் சுட்டுவிரலின் முனைப்பகுதியை விடவும் மிக மிக சிறியதாக காணப்படுகின்றது. சுமார் 0.575 x 0.575 மில்லி மீட்டர் அளவு கொண்ட இந்த சென்சார் ஆனது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
ஆம்னிவிஷன், தனது சென்சார் மற்றும் கேமரா தொகுதியானது (camera module) முக்கியமாக மருத்துவ பயன்பாடுகளுக்கானது என பரிந்துரைக்கிறது. உடலின் மிகச் சிறிய பகுதிகளை, இரத்த நாளங்கள் வழியாக உயர் தெளிவுத்திறனுடன் படம் பிடிக்க கேமரா தொகுதி உதவும் என்றும் நரம்புகள், கண் பாகங்கள், இதயம், முதுகெலும்பு, பெண்ணோயியல் பகுதிகள், மூட்டுகள் மற்றும் சிறுநீரக அமைப்பு ஆகியவற்றை படம்பிடிக்கலாம்.
200x200 Pixel கொண்ட புகைப்படங்களை எடுக்கக்கூடியதாகவும், சிறப்பு அம்சமாக நொடிக்கு 30 பிரேம்கள் கொண்ட வீடியோக்களையும் பதிவு செய்கின்றது.