BBC to extend its service with 4 more Indian languages
பணம் முதலீடு

BBC's new service : launches in Gujarati, Marathi, Punjabi and Telugu Indian languages in late 2017.

2017 : பிபிசி இன் உலக சேவையானது 5 ஆப்பிரிக்க மற்றும் 4 இந்திய மொழிகளிலும் (குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, பஞ்சாபி) கொரிய (Korean) மொழியிலும் சேர்த்து தொடங்க உள்ளது.
நிறுவனம் மொபைல் மற்றும் வீடியோ பதிவுகள் மற்றும் "பிரம்மாண்ட‌" சமூக ஊடகம் வழியாக‌ அதன் டிஜிட்டல் சேவைகளை விரிவாக்கம் செய்யவுள்ளது. இத்துடன், பிபிசியின் சேவையானது ஆங்கில மொழியையும் சேர்த்து 40 உலக மொழிகளில் கிடைக்கப்பெறும்..

இணையதளங்களின் அறிக்கைகள் படி பிபிசி நிறுவனம் இந்தியாவின் தில்லியில், 157 புதிய பாத்திரங்களை (இடங்களை) உருவாக்கி அதன் பிரிவுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளது என‌ அறியப்படுகிறது.

2017 பிற்பகுதியில் இந்திய மொழிகளில் தனது சேவைகளை விரிவாக்கம் செய்யப்போகின்ற‌ பிபிசி நிறுவனம் இதற்கான‌ காலநேரம் அல்லது தேதியை குறிப்பிடவில்லை.

பிரிட்டிஷ் சார்ந்த‌ பிபிசியின் சேவை விரிவாக்கமானது பிரிட்டிஷ் அரசாங்க நிதியினை பயன்படுத்தி சாத்தியமாகிறது என‌ கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது. பிபிசி இந்நிதியை பயன்படுத்தி ரஷ்யா, வட கொரியா மற்றும் எம்இஎன்ஏ பிராந்தியம் மற்றும் 500 மில்லியன் வாசகர்கள் என‌ சேவைகளை மேம்படுத்தி அதன் இலக்கினை 2022ல் எட்ட‌ திட்டமிட்டுள்ளது.

இதற்கென‌ ஆரம்பமாக‌, 2016-17 இல் பிபிசி £ 34 மில்லியனும் மற்றும் £ 85 மில்லியன் என‌ 2017-18 வரை அதன் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைக்காக‌ பெற்றுக்கொள்ளும் என‌ இணைய‌ அறிக்கைகள் தெரிவிக்கின்றன‌.