யூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து

Soon, YouTube may be a social network with text, image posts along with current videos

யூடியூப் வெகுவிரைவில் டெக்ஸ்ட், படம் கலந்த‌ சமூக‌ வ‌லைதளமாகிற‌து. யூடியூப் (YouTube), முழுமையாக‌ வீடியோவை இலக்கிடமாக கொண்ட‌ வலைத்தளமாகும், ஆனால் விரைவில் அது ஏனைய‌ சமூக வலைதளங்கள் போல‌ மாற‌ உள்ளதென‌ பல‌ சேதிகள் வந்துள்ளன‌.

யூடியூப் (YouTube) தனது பயனர்களுக்கு பேக் ஸ்டேஜ் (Backstage) எனும் வசதியினை அறிமுகம் செய்ய‌ உள்ள‌து. பேஸ்புக் (Facebook), ஸ்னாப்சாட் (Snapchat), மற்றும் ட்விட்டர் (Twitter) போட்டியின் மத்தியிலும், யூடியூப் (YouTube) பயனர்கள் தங்கள் சந்தாதாரர்களிடம் புகைப்படங்கள், வாக்கெடுப்பு (Poll), இணைப்புகள் (links), உரை பதிவுகள் (text posts), மற்றும் வீடியோக்கள் (videos) பகிர்ந்து கொள்ள முடியும். பேக்ஸ்டேஜ் (Backstage) ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு YouTube சேனல்களின் பக்கத்திலும் முகப்பு மற்றும் வீடியோ டேப் இன் அருகில் பேக் ஸ்டேஜ் (Backstage) பட்டன் / டேப் (Tab) காணப்படும் எனத்தெரிய‌ வருகிறது. பேக் ஸ்டேஜில் பகிர்வு செய்யப்படும் பதிவுகள் சந்தாதாரர்களின் (Subscribers) தகவலளிப்புகள் அறிவிப்புகளூடன் மிகத்தெளிவாய் தெரியும் வண்ணம் வரிசையில் தோன்றும்.

பேக் ஸ்டேஜ் வழியாக‌ ஊட்டப்படும் பதிவுகளை மற்ற‌ சேவைக‌ளிலும் பகிரக்கூடிய‌ வசதி இருக்கும். நீங்கள் YouTube இல் ஒரு வேடிக்கையான படம் (funny picture) ஒன்றை பதிவூட்டம் செய்தால் அதனை ட்விட்டர், பேஸ்புக் அல்லது பிற சேவைகளுக்கும் பகிர்ந்து அனுப்பும் (share) வசதி இருக்கும்.

ஆதாரம் : VB news

நாள் : 25.08.2016 திருத்தம் : 26.08.2016

புதியவை / Recent Articles