யூடியூபில் நேரலை வீடியோ, அனைவரும் பதிவேற்றம் செய்யலாம்

Gears

YouTube to add live streaming videos soon for all .

.

ட்விட்டர் (Twitter) மற்றும் பெரிஸ்கோப்பிற்கு (Persicope) அடுத்தபடியாக‌ YouTube தனது யூடியூப் பயன்பாடு (Youtube app) வழியாக‌ தனது அனைத்து பயனர்களுக்கும் லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்களை அப்லோடு செய்ய‌ அனுமதிக்கும் என் தனது வலைப்பதிவில் கூறியுள்ளது.

YouTube இந்த‌ வசதியினை The Young Turks, AIB, Platica Polinesia, SacconeJolys, and Alex Wassabi உடன் சேர்ந்து VidCon நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்த‌ உள்ள‌து.

ஏற்கனவே யூடியூப் பயன்பாட்டில் ஒரு டேப் (tab) பொத்தான் எந்தெந்த‌ நேரடி வீடியோக்களை பிளே செய்கின்றது மற்றும் நேரடி சேட் (Live Chat) போன்றவற்றை காட்டுகிறது. இந்த‌ லைவ் ஸ்ட்ரீம் வீடியோ வசதியினை பயன்படுத்தி ஏற்கனவே TV9, AajTak and Asianet News போன்ற‌ செய்தி சேனல்கள் நேரலை செய்திகளை யூட்யூப் பயன்பாட்டிலும், இணையதளத்திலும்
ஒளிபரப்பு செய்துவருகிறது.

பயனர்கள், வலது ஓரத்தில் உள்ள‌ பெரிய சிவப்பு பொத்தானை தட்டி படம்பிடித்துகொள்ளவும் அல்லது ஒரு சிறு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு தம்ப்னெய்லாக‌ (Thumbnail Photos) தேர்ந்தெடுக்கவும் செய்யலாம். மேலும் இதனைக் கொண்டு உங்கள் ரசிகர்களுடன் (fans) நேரலை ஒளிபரப்பு மற்றும் நேரடி அரட்டை (Chat) அடிக்க முடியும். YouTube லைவ் ஸ்ட்ரீம் வீடியோக்களை பயன்பாட்டில் தேட‌ முடியும் மேலும் பரிந்துரைகள் மற்றும் பிளேலிஸ்ட்களை (Playlists) காண்பிக்கவும் செய்யும்.

நாள் : 27.06.2016 திருத்தம் : 27.06.2016