யூட்யூபில் HDR வீடியோக்கள் : மேம்பட்ட HDR வீடியோ தரத்தை ஆதரிக்கும்

Youtube HDR videos
Gadgets

YouTube adds HDR videos support on its platform for much improved video quality

யூட்யூப் (Youtube), HDR வீடியோக்களுக்கு துணைபுரிகின்ற‌ (supports HDR) ஒரு முக்கிய புதுப்பிப்பினைக்கொண்டு மேம்பட்ட வீடியோ தரத்திற்கு (improved video quality) ஆதரவு அளிக்கின்றது. யூட்யூப் (YouTube) இல் எச்டி(HD videos) மற்றும் 4K வசதிகள் ஓராண்டிற்கு முன்ன்னர் சேர்க்கப்பட்டது. அது போல் அல்லாமல், இந்த முறை வண்ணங்களுக்கு முக்கியத்துவம் (video color importance) கொடுக்கும் HDR வசதியை சேர்த்துள்ளது.

உண்மையில், நாம் சாதாரண‌ டிவி (தொலைக்காட்சி Television) அல்லது கம்ப்யூட்டரில் (கணினி Computer) HDR வீடியோக்களின் அம்ச‌ பிரதிபலிப்பை கண்டு மகிழ‌ முடியாது. ஏனெனில் HDR ஆதரவான‌ பேனலுடன் (HDR supporting panel) கூடிய‌ டிவி அல்லது கணினி அல்லது கைபேசியில் தான் இந்த‌ வகை வீடியோக்களை பார்த்து இரசிக்க‌ முடியும். சிலரிடம் தான் 4K Ultra HD / HDR-compatible/ UHD டிவிக்கள் உள்ளன‌. இவ்வகை டிவிக்கள் HDR துணைபுரியும். ஆனால் விலை உயர்வானதால் இவ்வகை டிவிக்கள் அனைவருக்கும் சென்றடைய‌ சில‌ வருடங்கள் ஆகும்.

அதிகாரபூர்வமாக‌, HDR செயல்படுத்தப்பட்ட‌, ஒரே ஸ்மார்ட்ஃபோன் ஆன‌ சாம்சங்கின் கேலக்ஸி நோட் 7 ஆகும் (Samsung Galaxy Note 7 supports HDR). அதுவும் இப்பொது விற்பனையில் இல்லை, யாரும் இனி வாங்கவும் முடியாது.

தற்போதுவரையிலும், நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் போன்ற தளங்கள் HDR ஆதரவு அளிக்கின்றன‌ என்றாலும் அவை தங்களுக்குச் சொந்தமான‌ தனிப்பட்ட கோப்புக்களை உள்ளடக்கியவை. பார்வையாளர்கள் மற்றும் படைப்பாளிகள் என‌ இருவருக்கும் ஆதவளிக்கும் யூட்யூபின் இந்த‌ மேம்படுத்தல் செயலானது எலக்ட்ராணிக் பொருள் தயாரிப்பாளர்களை HDR வகை வீடியோகளுக்கான‌ கருவிகளை இன்னும் விரைவாக தயாரிக்க‌ நிர்பந்தப்படுத்தும் (தூண்டும்).

HDR க்கான‌, குரோம்காஸ்ட் அல்ட்ரா (Chromecast Ultra) கருவி கூஃகுளால் யூட்யூபிற்கென‌ (Google for Youtube) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் சாம்சங்கின் (Samsung's) அனைத்து 4K தொலைக்காட்சிகளிலும் (என்றாலும் SUHD பேனல்கள் மாத்திரமே நிறங்கள் மற்றும் பிரகாசத்தினை முழு அகலத்தில் காண்பிக்கும்), பிற‌ தயாரிப்பாளரின் கருவிகளிலும் அமுகப்படுத்தப்படும்.

HDR என்றால் என்ன‌ ?

HDR என்பது High-dynamic-range imaging என்பதன் விரிவாக்கம் ஆகும். HDR இமேஜஸ் (), என‌ பெயர் குறிப்பிடுவது போல, புகைப்படங்களின் இருண்ட‌ மற்றும் வெளிச்சமான‌ பகுதியை பலவகை டோன்களால் மிகுதியாக்கி காண்பித்தல் ஆகும். அதுபோல‌ HDR வீடியோ என்பதும் HDR படத்தை போன்று பிரகாசமான மற்றும் இருண்ட பகுதிகளுக்கு இடையேயான‌ டோன்களை ஒரு பெரிய அளவில் எல்லைகளாக்கி அட்டகாசமான‌ வண்ணமயமாக்கி காண்பிப்பதாகும்.

உங்களிடம் HDR இணக்கமான டிவி / பிற‌ கருவி (HDR Compatible devices) இருந்தால் நீங்கள் இந்த பட்டியலில் உள்ள‌ சில மாதிரி வீடியோக்களை (Try this videos) முயற்சி செய்யலாம்.

நாள் : 08.11.2016 திருத்தம் : 08.11.2016

புதியவை / Recent Articles