இந்த‌ அற்புத வேர்டு ஆர்ட் ஜெனரேட்டர் உங்களுக்கு 1990 களின் ஞாபகத்தினைக் கொண்டுவரும்

WordArt generator makes you are in 1990s and reminds the past.

நீங்கள் 90 களில் சில நிமிடங்களாவது கணினியை பயன்படுத்தியவர் என்றால்.. : நீங்கள் அந்த காலத்தில் "WordArt" எவ்வளவு முக்கியமாக‌ இருந்தது என்று நினைத்துக்கொள்வீர்கள். ஒரு பிராஜக்ட் செய்யும்போது அதன் அட்டையில் தலைப்பிற்காகவும், வாழ்த்து அட்டைகளுக்காகவும் என‌ பலவகையில் நமக்கு பயன்பட்ட‌ இந்த‌ வேர்டு ஆர்ட்டினை ஞாபகப்ப‌டுத்தி பாருங்கள் !!!!!!..

நமது இளம் பருவத்தில், பள்ளியில் படிக்கும்போது டாக்குமெண்ட் செய்யவும், ரெக்கார்டு அட்டையை அழகுபடுத்தவும், குளிர்ச்சியானதாய்க் காட்டவும் ஒரே வழி வேர்டு ஆர்ட் தான் . சில பட்டன் கிளிக்குகள் செய்வதன் மூலம், நம் வேலையை சக‌ வகுப்பு தோழர்களை விடவும் (சிலரை) அழகானதாய் காட்டியிருப்போம்.

ஆம். அன்றைய‌ விண்டோஸ் 95 வேர்ட் இல் இருந்த‌ மாதிரியான‌ ஒரு வேர்ட் ஆர்ட் கருவியை இப்போது ஆன்லைனில் பெறலாம். மேக் வேர்ட் ஆர்ட் (Make WordArt) என்பது வடிவமைப்பாளர் மைக் மச்மில்ல‌ன் ( Mike McMillan) என்பவரின் ஒரு இணைய‌ படைப்பாகும்.

நீங்களும் இந்த‌ வேர்ட் ஆர்ட் கருவியை பயன்படுத்தி / முய‌ற்சி செய்து பாருங்கள். கீழ்க்காணும் பட்டனை அழுத்தவும்.

நாள் : 16.11.2016 திருத்தம் : 16.11.2016

புதியவை / Recent Articles