யார் வேண்டுமானாலும் ஸ்கைப் கால் செய்யலாம்; அக்கவுண்ட், டவுண்லோடு தேவையில்லை

Now Skype allows Guest conversations. Skype call ans chat without account or download and installation

ஸ்கைப் இல் இப்போது நீங்கள் கணக்கு இல்லாமல் (Call through Skype without account) அழைப்புகளை செய்யலாம். மைக்ரோசாப்ட் மிக அவசியமான அம்சம் ஒன்றினை (Microsoft's new Skype feature) உருவாக்கி ஸ்கைப் ஐ மேம்படுத்தியுள்ளது. இப்போது ஸ்கைப்பினை பயன்படுத்த‌ டெஸ்க்டாப் பயன்பாடோ (Desktop Application) அல்லது ஸ்கைப் டவுண்லோடு (download skype) செய்ய‌ புது கணக்கையோ பதிவு செய்யவேண்டிய‌ அவசியமில்லை. இவை இல்லாமலே ஸ்கைப்பின் வலை சார்ந்த விருந்தினர் இடைமுகம் (skype Guest interface) அழைப்புகளை விடுக்க‌, பெற முடியும்.

இதற்காக‌ நீங்கள் செய்ய‌ வேண்டியது ஒன்றேதான். ஸ்கைப் கால் செய்ய (skype Call), நீங்கள் உங்களது உலாவியில் (பிரவுஸர் / Browser) skype.com இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

Start a conversation பட்டனை கிளிக் செய்யுங்கள்.இதன்பின் தோன்றுகின்ற‌ விண்டோவில் ஒரு பெயரினை டைப் செய்யுங்கள். நீங்கள் யாருடனும் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளும் ஒரு இணைப்பை ( Shareable லிங்க் / Link) பெறுவீர்கள்.

இந்த‌ இணைப்பினைப் பயன்படுத்தி வாய்ஸ் கால் , வீடியோ அழைப்பு, குழு அரட்டை தொடங்கலாம், மற்றும் ஃபைல்களையும் பகிர்ந்து (skype voice call, video call, group chats and file sharing) கொள்ளலாம். இந்த‌ இணைப்பு 24 மணி நேரமே செல்லுபடியாகும். வீடியோவைப் பாருங்கள். புரிந்துகொள்வீர்கள்.

நாள் : 15.11.2016 திருத்தம் : 09.12.2016

புதியவை / Recent Articles