1377 சமூக வலைதள பக்கங்களுக்குத் தடை விதித்த‌ இந்திய அரசு : த‌.தொ சட்டம் 2000, பிரிவு 69A இன் படி

The Indian Government blocked 1,377 social media pages from 2013-16 under the section 69A of the IT Act

இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69A இன் படி, ஆண்டு 2013-16 வரையிலும் 1377 சமூக வலைதள பக்கங்களை தடை செய்துள்ளது. இத்துடன் 1,670 சமூக ஊடக வலைத்தள URL களையும் நீதிமன்ற உத்தரவுப் ப‌டி தடைசெய்துள்ளது.

2013‍ - 2016 வரையிலும் தடைவிதிக்கப்பட்ட‌ சமூக‌ வலைதள‌ பக்கங்களின் எண்ணிக்கை 3,047.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69A

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 69Aபடி (Information Technology Act, 2000: Section 69A of the IT Act, 2000) இந்திய‌ அரசாங்கம் தனது தலைமை உரிமை, இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு நலன் கருதியும், அண்டை நாட்டு / பிறனாட்டு அரசுகளுடனான நட்பு உறவுகள், பொது ஒழுங்கு கருதி, இவை தொடர்பான நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றங்களைத் தூண்டும் செயல்களை தடுப்பதற்காக‌, பொதுமக்கள் இவ்வகை இணையதளங்களை / ஆன்லைன் தகவல்களை அணுகுதற்கு தடைவிதிக்க‌ அனுமதிக்கிறது. இச்சட்டத்தின் விதிகளுக்கு இணங்க தவறினால், அபராதத்துடன் சேர்த்து 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கவும் வ‌ழிவகுக்கின்றது.

அரசாங்கம், நவம்பர் 2015 மற்றும் 2016 அக்டோபர் இடையே, சுமாட் 510 சமூக ஊடக பக்கங்களை தடுத்துள்ளது. இதே சமயத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தடுக்கப்பட்ட‌ பக்கங்களின் எண்ணிக்கை 353 ஆக இருந்தது.

உச்ச நீதிமன்றம், சவாலாக‌ விளங்கும் த‌.தொ சட்டத்தின்படி தொடர்ச்சியான‌ பல‌ வழக்குகளைக் கையாண்டுள்ளது, பிரிவு 66A (அருவருப்பான ஆன்லைன் அறிக்கைகளுக்காக‌ 3 ஆண்டுகள் சிறை), பிரிவு 79 மற்றும் அதன் விதிகள் (இடைத்தரக்காரகளை கட்டாயப்படுத்தி ஆன்லைன் பக்கங்களை நீக்கச்செய்வது) மற்றும் பிரிவு 69 (ஆன்லைன் தகவள்களை தடுப்பது) என‌ பல‌ பிரிவுகளின் விதிப்படி கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன‌.

2015 இல், பிரிவு 66A கீழ், 3137 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். (பிரிவு 66A இப்பொழுது செயல்படாமல் இருக்கும் பிரிவாகும்). இதில் 82 இளம்சிறுசுகளும் கைதுசெய்யப்பட்டனர்.

மேற் கூறப்பட்ட‌ புள்ளி விபரங்கள் அனைத்தும் எக்ணாமிக் டைம்ஸ் பக்கத்திலிருந்து பெறப்பட்டது. பாருங்கள்

நாள் : 26.11.2016 திருத்தம் : 26.11.2016

புதியவை / Recent Articles