ஒபேரா பிரவுசர் அப்டேட் ; மின்னல் வேகத்தில் பக்கங்களை காண்பிக்கும்.

OPera Browser updates version 43
Gadgets

Opera Browser for Windows Updated New Version features Superfast Page Loading and Privacy.

ஓபேரா மென்பொருள் நிறுவனம் (Opera Software) விண்டோஸ்க்கான‌ புதிய ஓபேரா 43 பதிப்பினை (Opera 43 version for Windows) அறிவித்துள்ளது. இந்த‌ பிரவுசர் (உலாவி /opera browser) அதிக‌ வேகம் மற்றும் தனியுரிமைக்கென‌ (superfast page loading and privacy) உருவாக்கப்பட்டுள்ளது. ஒபேரா உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கைப்பேசிகளில் அதிகமாக‌ பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா (opera mostly used in mobile phones) விளங்கியது.

நாளாக‌ நாளாக‌, பிற‌ உலாவிகளின் வருகையாலும் குறிப்பிடும்படியான‌ சிறப்பம்சங்கள் (specific browser features) மற்றும் வேகம் காரணமாகவும் ஒபேராவின் பயன்பாடு குறைவடையத்தொடங்கியது. மற்ற‌ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப்போல‌ விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் ஒபேரா நிறுவனமும் இறங்கியுள்ளது.

இதற்காக அதன் ஒபேரா உலாவியை அதிக‌ வேகமாக செயல்பட‌ வைக்கும் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

ஓபேரா எடுத்துரைப்பதுபோல‌, புதிய ஓபேரா 43 உலாவியின் முக்கியமான‌ மற்றும் உசத்தியான‌ அம்சம் என்றால் "உடனடி பக்கம் ஏற்றுதல் (instant page loading)", கிட்டத்தட்ட உடனடியாக ஒரு வலை பக்கத்தைத் திறக்கும் திறன் கொண்டது. நீங்கள் ஓபரா 43லிலுள்ள‌ URL பெட்டியில் தட்டச்சு (ட்யிப்) செய்யும் நேரத்தில், பின்னணியில் பக்கத்தைத் திறக்கவைப்பதற்காக‌ குறைந்த நேரம் எடுக்கும். இது நீங்கள் கோரிய பக்கத்தை ஏற்ற (திறக்க‌) 2 முதல் 3 வினாடிகளை எடுத்துக்கொள்வதால் உலாவியின் செயல்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக‌ 3 நொடிகளில் ஒரே நேரத்தில் பல முழு வலைப் பக்கங்களைத் திறக்க முடியும்.

முந்தைய ஓபேரா 42 பதிப்பை (opera browser version 42) விட இப்போதிய‌ உலாவியின் ஆரம்பிக்கும் வேகமானது 13% வேகமாக அதிகரித்து வலைப் பக்கங்களை வெகுவாக‌ லோடு செய்ய‌ அனுமதிக்கிறது.

நாள் : 09.02.2017 திருத்தம் : 09.02.2017