முதல் 1Gbps பிராட்பேண்ட் சேவையை இந்தியா பெறுகிறது

act-1gbps-internet-service-india
Technology

India's first 1Gbps broadband service from ACT

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைதனை வழங்கிவரும் ஏசிடி (ACT) 1Gbps பிராட்பேண்ட் சேவையை (1Gbps speed - Internet service) துவங்க‌ உள்ளதாக‌ ஒரு பத்திரிக்கை நிகழ்வின் போது அறிவித்துள்ளது.

இது இந்தியாவில் முதன்முதலாக‌ வழங்கப்பட‌ உள்ளது. இந்தியாவில், பிராட்பேண்ட் வழங்குநர்களுள் மூன்றாவது பெரிய நிறுவனமான ஏசிடி, அதன் ஜிகாபைட் இணைய சேவைதனை ஹைதெராபாத்தில் துவங்க‌ உள்ளது.

இந்த‌ சேவையானது கூகிள் ஃபைபர் (Google Fiber) வழங்கிவரும் வேகத்திற்கு நிகரானதும், மற்றும் இந்தியாவின் ஏனைய‌ பிராட்பேண்ட் வழங்குநர்களின் இன்டர்னெட் வேகத்தை விட‌ பத்து மடங்கு அதிகமானதாகும்.

நாள் : 30.03.2017 திருத்தம் : 03.07.2017

புதியவை / Recent Articles