ஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது
பேஸ்புக்கின் வீடியோ சேவைத் திட்டம் குறித்த பல பேச்சுக்கள் சில மாதங்களாக கேட்டிருக்கிறோம், இப்போது அதற்கான பொழுது வந்துள்ளது. YouTube மற்றும் நெட்ஃபிளீக்ஸ் போன்ற வீடியோ சேவையினை புதிதாய் ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது. புதுச் சேவையின் பெயர் வாட்ச் (Watch).
தற்போது அறிமுகம் செய்யப்பட்ட இவ்வீடியோ வசதியினை பயன்படுத்துவதனால் நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் எக்ஸ்குளூசிவ் (பிரத்தியேக) வீடியோக்களை பார்த்து மகிழ முடியும். ஃபேஸ்புக்கின் பயன்பாடுகள், கைபேசி, இணையவழி பயன்பாடு வழியாக மொபைல் சாதனங்கள், டெக்ஸ்டாப் கணினிகள் மற்றும் பேஸ்புக் தொலைக்காட்சி ஆகியவற்றில் வீடியோக்களை கண்டுகளிக்கலாம்.
யூட்யூப், நெட்பிளிக்ஸ் சேவைகளைப்போல விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நேரடியாகவும், பதிவு செய்தும் ஒளிபரப்பப்படவுள்ளது. அணுகலுள்ள பயனர்கள் பேஸ்புக்கின் ஆப்பில், டிவி-வடிவ வாட்ச் பொத்தானைப் பார்க்க முடியும். ஃபேஸ்புக்கின் வாட்ச் டேப் / பொத்தானைப் (Facebook launches Watch tab) கிளிக் செய்வதன்படி வீடியோக்களை பட்டியலாகக் காணலாம்.
தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் வாட்ச் வீடியோச் சேவையானது விரைவிலேயே பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
