மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அப்டேட் இனி ட்விட்டரிலும் தெரிந்து கொள்ளலாம்

The Bombay Stock Exchange (BSE) has partnered with Twitter to provide live updates of Sensex

மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange / BSE), சென்செக்ஸ் அளவுகள் (sensex levels), பங்கு விலைகள் (stock prices) நேரடி தகவல்கள், பங்கு விலைகள் மற்றும் சென்செக்ஸ் நிறுவனங்களின் தொடக்க மற்றும் நிறைவு புள்ளிவிவரங்களை வழங்க ட்விட்டர் உடன் கூட்டுசேர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை (BSE) நிறுவனம் 2012 முதல் ட்விட்டர் கணக்கினை கொண்டிருந்தாலும், நிகழ் நேர‌ ஊட்டங்கள் எதையும் வழங்கவில்லை.

பிஎஸ்இ யின் இந்த‌ டை அப் நான்கு புதிய அம்சங்களுடன், ட்வீட் மூலம், மக்களை சந்தையின் நிலவரங்களைப் பின்பற்ற அனுமதிக்கிறது. SSensex 30 தொடக்க மற்றும் நிறைவு புள்ளிவிவரங்கள் குறித்த‌ தானியங்கும் நேரடி செய்திகளை, சென்செக்ஸ் 30 பங்கு விலை தானியங்குபதில் ட்வீட்கள் மற்றும் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை சென்செக்ஸ் புள்ளிகள் குறித்த‌ நேரடி புகைப்படம் ஒன்றினையும் டுவிட்டரில் காணலாம்.

பயனர்கள் பதிவு செய்ய #subscribe அல்லது #companyname, விலகுவதற்காக #unsubscribe அல்லது #companyname பயன்படுத்தி மும்பை பங்குச் சந்தையின் ட்விட்டர் பயனர்பெயருடன் (@BSEIndia) பதிவு செய்யலாம்.

டுவிட்டரில் பதிவு செய்த‌ சந்தாதாரர்கள் காலை 9 மணி முதல் மாலை 3:30 மணி வரையில் பங்குச்சந்தையின் மணிநேர ட்வீட்களை பார்க்கலாம்.

நாள் : 20.09.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles