ஆப்பிள் மியூசிக் : 17 மில்லியன் கட்டண சந்தாதாரர்கள் ; அறிமுகமான‌ ஒராண்டிற்கு பிறகு

Apple iPhone close
Gadgets

Apple Music has 17 million paid subscribers after a year of launch

ஆப்பிள் மியூசிக் (Apple Music), ஆப்பிள் மியூசிக் ஸ்ட்ரீமிங் (Apple’s music streaming) மற்றும் டவுண்லோட் சேவை (download service), 17 மில்லியன் பிரீமியம் கட்டண‌ சந்தாதாரர்களைப் (17 million paid Premium subscribers) பெற்றுள்ளது என‌ ஆப்பிள் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்பிள் மியூசிக்கிற்கு 11 மில்லியன் ஒத்திகை உறுப்பினர்கள் ( trial members ) பதிவுசெய்துள்ளனர். இந்த‌ 11 மில்லியன் உறுப்பினர்களில், 2 மில்லியன் சந்ததாரர்கள் டாலர் $ 14.99க்கான‌ குடும்ப திட்டத்தினை (family plan) தேர்வு செய்தனர் என‌ ஆப்பிள் கூறுகின்ற‌து. இந்த‌ திட்டத்ததில் 6 பேர் வரை கேட்டு மகிழலாம்.

உலகலவில், 30 ஜூன் 2015 மற்றும் அதே ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆப்பிள் மியூசிக் சேவை, இசை பதிவிறக்கங்கள் (music downloads), வானொலி ஸ்ட்ரீமிங் (radio streaming)மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை ஒற்றை பயன்பாட்டைக் கொண்டு (In a single app) ஒருங்கிணைக்கின்றது.

ஆப்பிள் மியூசிக் லைபிரரியில் (Apple Music library) 30 மில்லியன் பாடல்கள் , மற்றும் மாதத்திற்கு $10 செலுத்த‌ வேண்டும். ஆப்பிள் தனது மியூசிக் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு இசை பதிவிறக்கங்களில் இருந்து வருவதாக‌ கூறியுள்ளது. மேலும் ஆப்பிள் தந்து மியூசிக் சேவையினை விளம்பர பலகைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக‌ ஒரு பிரம்மாண்ட‌ மார்க்கெட்டிங் பிரச்சாரம் செய்ய‌ திட்டமிட்டுள்ளது என‌ அறியப்படுகிறது.

ஆதாரம் : Appleinsider செய்தி வெளியீடு

நாள் : 10.09.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles