Google Knowledge Graph now has animal/pet informations
Gadgets

Google search now gets information about lot of animals

நீங்கள் செல்ல‌ பிராணிகள் (Pet lovers) குறித்த விஷயங்களை இன்டெர்னெட்டில் (Internet) தெரிந்துகொள்வதற்காக‌ பல‌ மணி நேரம் செலவிட்டும் முழுமையான‌ தகவல்களை பெற‌ முடியாமல் போயிற்றே என‌ வெறுத்து போயுள்ளீர்களா ?.

இப்போது கூகிள் உங்களது தேடலினை (Google Search makes easy) எளிதாக்குகிறது. நீங்கள் ஒரு விலங்கு பற்றிய‌ தகவலை (Info about Pet/animal) அறிய‌, கூகிள் தேடலில் தேடல் மேற்கொள்ளும்போது, அதன் 'உங்களுக்கு தெரியுமா' ('Do You know)) பிரிவில் ஒரு தற்போக்கான (random) உண்மைத் தகவலினை அறிவு தகவல் ரேகையில் (knowledge graph cards) காண்பிக்கும்.

முள்ளெலிகள், பற்றி எந்த வேடிக்கைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை - ஆனால் பூனைகளால் சுமார் 100 வித பல்வேறு குரல்களை செய்ய முடியும், மற்றும் குதிரைகள் 10 கேலன்கள் எச்சிலை உற்பத்தி செய்யும் போன்ற‌ தகவல்கள் கூகுளின் அறிவு தகவல் ரேகையில் (knowledge graph cards) தேடல் முடிவின் முதற் பக்கத்தில் பார்க்கலாம்.

கூகுள் இந்த‌ தகவல்களை மூன்றாம் தரப்பினரின் (third parties) இணையதளத்தினில் இருந்து பெற்று தனது அறிவு தகவல் ரேகையில் காண்பிக்கின்றது. காலப்போக்கில் மேலும் தகவல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லும். சில‌ நாட்களில், தகவல்களைப் பெற்றுத்தரும் கூகுளின் வசதிகள் அதிகரிக்கும்.

எனவே வரும் நாட்களில் தேடல் இயந்திரம் (Search engine) என‌ அறியப்படும் கூகுள் தகவல் இயந்திரமாகவும் (Information engine) விளங்க‌ உள்ளது.