மைக்ரோமேக்சின் கேன்வாஸ் பிராண்ட் ஸ்மார்ட் டிவி

Commerce

Micromax Canvas brand Smart TVs

மைக்ரோமேக்ஸ், கேன்வாஸ் (Micromax Canvas) இரக‌ ஸ்மார்ட் LED டிவிக்களை (Smart LED TVs) ரூ 27,990 இருந்து தொடங்கி ரூ 69.990 வரையிலான‌ விலை அளவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த‌ தொலைக்காட்சிகள் ஆகஸ்டு 14 முதல் ஃபிலிப்கார்ட்டில் பிரத்தியேகமாக (Flipkart exclusive) விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே இதற்கான‌ முன்பதிவு துவங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் உடன் வெளிவரும் இந்த‌ டிவிக்கள் Google Play ஸ்டோர், யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஜிமெயில் போன்ற‌ பயன்பாடுகளைப் பயன்ப‌டுத்திக் கொள்ள‌ முடியும்.

டிஸ்கவுண்ட் விலை ரூ 19,999.00 இல் (720p resolution) கொண்ட‌ 32" டிவி ; டிஸ்கவுண்ட் இல்லாமல் : ரூ 27,990.00.

டிஸ்கவுண்ட் விலை ரூ 29,999.00 இல் (1080p resolution) கொண்ட‌ 30" டிவி ; டிஸ்கவுண்ட் இல்லாமல் :ரூ 69,990.00.

டிஸ்கவுண்ட் விலை ரூ 42,999.00 இல் (1080p resolution) கொண்ட‌ 50" டிவி ; டிஸ்கவுண்ட் இல்லாமல் :ரூ 69,990.00 என‌ 3 ஸ்மார்ட் டிவிக்கள் உள்ளன‌.

"எம் ஸ்கிரீன்" (M! Screen), அம்சம் கொண்ட‌ இந்த‌ டிவி, கைபேசி ஊடாக, இசை, வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை திரையில் காண‌ முடியும்.

எம் கணெக்ட் (M Connect) எனும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டை நிறுவினால் (Android app) பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, டிவியினை கட்டுப்படுத்த முடியும். மேலும் டிவியில் ஸ்மார்ட்போன் திரையினை (Smart phone screen) பகிர்ந்து கொள்ளவும் ம‌ற்றும் கேம்களைக் கட்டுப்படுத்தவும் (Game Controller) பயன்படுத்த இயலும்.

நாள் : 11.08.2016 திருத்தம் : 11.08.2016

புதியவை / Recent Articles