Xiaomi Mi Smart Water Purifier
Products

Mi Smart Water Purifier launched in India, price starts at Rs 11,999

சயோமி நிறுவனம், முதன்முறையாக சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart Water Purifier) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வாட்டர் பியூரிஃபையர் இந்தியப் பயனர்களுக்காக பென்டா சுத்திகரிப்பு செயல்முறை சேவையுடன் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சயோமி மி ஸ்மார்ட் நீர் சுத்திகரிப்பு சாதனமானது இந்திய வாடிக்கையாளர்களுக்காக, அடிக்கடி மின்சார வெட்டுக்கள் இருக்கும் பகுதிகளை மனதில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது,
எஃப்.டி.ஏ (FDA) அங்கீகரிக்கப்பட்ட பொருட்களிலிருந்து தண்ணீரை சேமிக்க 7 லிட்டர் சேமிப்புத் தொட்டி உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மி ஸ்மார்ட் வாட்டர் சுத்திகரிப்பு சாதனம் ஒரு மின்-வழிமுறை சுத்திகரிப்பு செயல்முறையையும், நிகழ்நேர டி.டி.எஸ் மானிட்டர் மற்றும் DIY/ டூ-இட்-யுவர்செல்ஃப் (Do It Yourself) வடிகட்டி-மாற்று யுக்தியையும் பெற்றுள்ளது.

சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், UV மற்றும் RO போன்ற அம்சங்களை ஆதரிக்கும் விதத்தில் ஸ்மார்ட் டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் (Do It Yourself) திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் இதுதான் என்று சியோமி தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் வாட்டர் ஃபில்டரில் வெள்ளை நிறத்துடன், உங்கள் சமையலறை சுவரில் A4 காகிதத் தாள் அளவிலான இடத்தை பிடித்துக்கொள்ளும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart Water Purifier) FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலையான மின்சாரம் பற்றாக்குறை உள்ள இந்தியப் பயனர்களைக் கவனத்தில் கொண்டு பிரத்தியேக ஆன்டி- ஷார்ட் சர்கியூட் தொழில்நுட்பத்துடன்,
பாதிப்படையாமல் இருப்பதற்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சமையல் அறையில் உள்ள இன்டிரியர் அலங்காரத்திற்கு ஏற்றார் போல் இதன் டிசைன் (அமைப்பு) வடிவமைக்கப்பட்டுள்ளது.

சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சிறப்பம்சம்

பாலிப்ரொப்பிலீன், கார்பன் ஃபில்டர் மற்றும் UV லைட் மூலம் தண்ணீர் 99.99% கச்சிதமாக சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையரில் சுத்திகரிக்கப்படும் நீர் மிகவும் பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று சயோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை விபரம்

சயோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர்,அமேசான், பிளிப்கார்ட் தளங்கள் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com ஆகின
தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலையானது வெறும் ரூ.11,999 என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.