பயந்த பிரான்ஸ் மக்கள் : 70 வருடங்களுக்கு பிறகு ஒளித்து வைத்திருந்த ஆடம்பர கார்கள் கண்டுபிடிப்பு !!

Beautiful cars hidden away from Hitler. Discovered 70 years later in rust condition

ஹிட்லருக்குப் பயந்து பிரான்ஸ் மக்கள் ஒளித்து வைத்திருந்த‌ கார்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜேர்மனியின் சர்வாதிகாரியான‌ அடோல்ஃப் ஹிட்லருக்கு (Adolf Hitler)) பயந்து பிரான்ஸ் மக்கள் ஒளித்து வைத்திருந்த சொகுசான‌ பழமையான கார்கள் (Beautiful luxury cars) சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் உலகப்போரின் போது (During Second World War), ஹிட்லர் தலைமையிலான நாசிப்படைகள் (Nazis) பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைந்து பிரான்ஸின் செல்வந்தர்களிடமுள்ள‌ விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றினர் என்பது வரலாறு.

இதன்காரணமாக‌ பிரான்ஸ் நாட்டு (France) செல்வந்தர்கள் அவர்களது விலையுயர்ந்த கார்களை (Costly cars) நாசிப்படைகளின் கண்களில் பட்டிவிட்டால் நிச்சயம் பறிமுதல் செய்துவிடுவார்கள் என்கின்ற‌ அச்சத்தினால் கல் குவாரி (quarry) சுரங்கத்திற்குள் மறைத்து வைத்துள்ளனர்.

அன்று ஏராளமான செல்வந்தர்கள் போரின் போது பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் சுமார் 70 ஆண்டுகள் கழித்து அவர்கள் பயன்படுத்திய‌ கார்கள், இன்று ஒரு கார் புதையலை போன்று கண்டறியப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வின்சென்ட் மிக்கேல் ( Vincent Michel, Photographer from Belgium) என்ற புகைப்படக்காரரால் இந்த‌ புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள‌ கார்கள் (Cars), 19-ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான சூப்பர் மாடல்’ கார்களாக விளங்கிய‌ சிட்ரோயென்ஸ்(Citroën), ரெனால்ட்ஸ்(Renault), பியூகியோட்ஸ்(Fugio) மற்றும் ஓபேல் (Opel) ரக கார்கள் அனைத்தும் துருப்பிடித்து, பொலிவிழந்து சிதிலமாகி வரலாற்று கலைப்பொருட்களைப்போல் காட்சி அளிக்கின்றன.

நாள் : 05.12.2016 திருத்தம் : 05.12.2016

புதியவை / Recent Articles