Egg Rack
உணவு

Is it safe to refrigerate eggs

ஆகா.., ப்ரிட்ஜ் இருப்பதால், சமைத்த உணவுகளை இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்தி விடலாம். இதற்காகத் தான் நாம் ஃபிரிட்ஜ் வாங்குகின்றோம். ஆனால் ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் எல்லாவற்றையும் பதப்படுத்தி வைத்து, அதைத் தேவைப்படும்போது சூடேற்றி சாப்பிடக்கூடாது என்பது தெரியுமா?. அப்படி செய்வதனால் உடலுக்கு தான் தீங்கு விளையும்.

அதேப்போல் நாம் வாங்கும் கோழி முட்டைகளை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல‌ என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் (Eggs stored in Room temperature) பராமரிக்கப்படும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கப்படும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமென்றும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

முட்டையை மிகக் குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரித்து வைத்து பின்னர் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் தோடு (ஓடு) அதிகம் வியர்த்து விடுகின்றது. முட்டையின் ஓட்டில் காணப்படும் சிறுதுளைகள் வழியாக‌ பாக்டீரியாக்கள் வேகமாக உள்புகுந்து வளர்ச்சியடைய‌ ஆரம்பிஹ்துவிடும். எனவே முட்டை வாங்கினால் அதை உடனே சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் இல்லையெனில் அறை வெப்பநிலையில் வைத்து பராமரித்து வாருங்கள்.

இவ்வாறு வாங்கிய முட்டையில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் (Salmonella infection) இருந்து, அதனை ப்ரிட்ஜில் வைத்து பராமரித்தால், மற்ற‌ முட்டைகளும் அந்த கொடிய பாக்டீரியாவால் தாக்கப்படும். ஆக‌ இதனைத்தவிர்க்க‌ வேண்டுமானல், அறைவெப்பநிலையிலேயே முட்டையை பத்திரப் படுத்துங்கள்.

கேக் செய்ய பயன்படுத்தும் முட்டையை ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க கூடாது. ஏனெனில் ப்ரிட்ஜில் வைக்கும் முட்டையின் கருவானது மிகுந்த குளிர்ச்சியுடன் காணப்படும், அதைக் பயன்படுத்தி கேக் செய்ய நினைத்தால், கேக் கடினமானதாக இருக்கும்.

முட்டையை நல்லதா / கெட்டதா என‌ எப்படி தெரிந்துகொள்வது ?

இதனை அறிய, ஒரு பெரிய பாத்திரத்தில் / பௌலில் நீரை நிரப்பி, அதில்வாங்கிய‌ முட்டையைப்போட்டு விடுங்கள், கீழே அடிமட்டத்தில் இருப்பவை நல்லவை, முட்டை மிதந்தால் அந்த முட்டை கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம்.