உடலுக்குத் தேவையான‌ புரோட்டீன் உணவுகள்!

Protein Rich Food
ஆரோக்கியம்

Protein Foods for Body building

Food that helps you to fight against cancer

.

புரோட்டின் உணவுகள் உடலுக்கு மிக மிக முக்கியமானவையாகத் தேவைப்படும் சத்து. உடலின் ஹார்மோன்கள், என்சைம்கள், புரொட்டினிலிருந்துதான் உருவாகி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்திற்கும், உடல் மற்றும் உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன‌. வளர்ந்துவரும் குழந்தைகளில் உடல் கட்டமைப்பிற்கும் வளர்சிக்கும் புரோட்டின் உணவுகள் தேவைப்படுகின்றன‌. அசைவ‌ உணவுகளில் அதிக அள‌வில் காணப்படும் பொருள் புரோட்டின். அதுபோல சைவப் பிரியர்கள் கட்டாயம் நிறைய புரோட்டின் சத்து நிறைந்த‌ சைவ‌ உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த‌ உணவுகளில் எவ்வளவு புரொட்டின் சத்து உள்ளது என பார்க்கலாம்.

சீஸ் (Cheese)

அரை கப் சீஸில் 13கி புரோட்டின் உள்ளது. புரோட்டினுடன் கால்சியமும் அதில் உள்ளது. சீஸினை பிரட்டிலோ அல்லது காய்கறிகளிலோ சேர்த்து உண்ணலாம். இது மிகச் சிறந்த எளிய‌ ஆயத்த‌ உணவாகும்..

சோயா மில்க் (Soya Milk)

அரை கப் சோயா மில்க்கில் 7 கி புரோட்டின் உள்ளது. பால் குடிக்கதவர்கள் சோயா மில்க்கை இரு வேளைகளில் தினமும் குடித்தால் உடலுக்குத் தேவையான புரோட்டின் கிடைக்கும்..

பாதாம் (Badham)

ஒரு கைப்பிடி பாதாமில் 6 கி புரோட்டின் உள்ளது. அதனை பொடியாக பாலில் கலந்தோ, அல்லது உணவில் சேர்த்தோ எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக‌ ஃபேட்டி அமிலம் ( fatty acid) உள்ளது. இது இதயத்திற்கு மிக நல்லது.

யோகார்ட் (Yoghurt)

ஒரு கப் யோகார்டில் 15கி புரோட்டின் உள்ளது. தினமும் ஒரு கப் யோகார்ட் எடுத்துக் கொண்டால் போதும். குறிப்பாக குழந்தைகளுக்கு தரலாம்.

பீநட் பட்டர் (Peanut Butter)

2 ஸ்பூன் பீநட் பட்டரில் 8 கி புரோட்டின் உள்ளது. எனவே தினமும் இரு ஸ்பூன் ஜூஸிலோ, பிரெட்டிலோ கலந்து சாப்பிடலாம்.

பீன்ஸ் வகைகள் (Beans)

கிட்னி பீன்ஸ், ப்ளாக் பீன்ஸ், மற்றும் அவரைக்காய்கள் ஆகியவைகள் நிறைய புரோட்டின் சத்துக்களை கொண்டுள்ளது. 13-15 கி புரோட்டின் ஒரு கப் பீன்ஸ் காய்களில் உள்ளது. அதோடு நார்ச்சத்துக்களும் கிடைக்கும்.

நட்ஸ் (Nuts)

பூசணி விதைகள், பாதாம், வேர்கடலை, வால்நட், ஆகியவைகள் அதிகம் புரோட்டினை கொண்டுள்ளது. இவை குறைந்தது 7 கி புரொட்டினை உடலுக்கு தரும்.

கோதுமை பிரட் (Wheat Bread)

கோதுமை ப்ரெட்டில் நிறைய புரோட்டின் மற்றும் நார்சத்துக்கள் உள்ளன. காய்கறிகளைக் கொண்டு பிரட் சேண்ட்விச் செய்தால் ஒரு நாளைக்கு தேவையான புரோட்டினை பெறலாம்.

நாள் : 03.06.2016 திருத்தம் : 17.01.2017