TOSHIBA X300 HDWF180XZSTA 8TB 7200 RPM hard disk
Gadgets

Toshiba's 8TB High-Performance Internal Hard Drive TOSHIBA X300 HDWF180XZSTA 8TB 7200 RPM

கணினி, கணினி பாகங்கள், கணினி தொடர்புடைய‌ துணைச் சாதனங்களை (Computer Accessories) உருவாக்கி வழங்கிவரும் முன்னணி நிறுனவங்களுள் தொஷிபாவும் அடங்கும். தொஷிபா (Toshiba) நிறுவனம் தற்போது கணினி துணைச் சாதனம் பிரிவில் ம‌ற்றுமொரு தயாரிப்பினை அறிமுகம் செய்துள்ளது..

3.5 அங்குல அளவு, 8TB சேமிப்பு கொள்ளளவுடைய புது ஹார்ட் டிஸ்க் (TOSHIBA X300 HDWF180XZSTA 8TB 7200 RPM Internal Hard Disk) தயாரிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.
X300 தொடரைச் சார்ந்த‌ இந்த‌ ஹார்டு டிஸ்க்கை இம்மாதம் முதல் சில்லறை விற்பனையாளர்களிடம் 2 ஆண்டு லிமிடட் வாரண்டியுடன் பெறலாம் . தொஷிபா (Toshiba) தன் X300 தொடரில் 4 TB, 5 TB, 6 TB கொள்ளளவு கொண்ட‌ ஹார்ட் டிஸ்கள் முன்னரே விற்பனை செய்து வருகின்றது.

புது 8TB ஹார்ட் டிஸ்க் ஆனது SATA வகையை சார்ந்ததுடன், 7,200 RPM மற்றும் 6 Gbit/s வேகத்தில் தரவுகளைக் கடத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. எனினும் இதன் விற்பனை விலை குறித்த‌ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நீங்கள் இதனை ஆன்லைனில் வாங்க‌ விரும்பினால் நியூ எக் இணையதளத்திற்குச் செல்லுங்கள். இதோ அதற்கான‌ இணைப்பு -- கிளிக் செய்யவும்