Gmail Smart Compose Feature
Software

Gmail’s new Smart Compose feature. How to enable and use

ஜிமெயில் "ஸ்மார்ட் கம்போஸ்" அம்சம் (Gmail’s Smart Compose feature), மின்னஞ்சல்களை விரைவாகவும் இலக்கண பிழைகள் இல்லாமலும் உருவாக்க உதவுகிறது. இதற்கென‌ இயந்திரக் கற்றல் முறையினை பயன்படுத்தியுள்ளது கூஃகிள். ஜிமெயில் "ஸ்மார்ட் கம்போஸ்" வசதியை எப்படி பயன்படுத்துவது?. இது பற்றி பார்ப்போம்.

கூகிள் அதன் வருடாந்திர டெவெலப்பர் மாநாட்டில் ( I / O 2018 இல்) இந்த‌ புதிய "ஸ்மார்ட் கம்போஸ்" அம்சமெனும் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது.

ஸ்மார்ட் கம்போஸ் - நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்களது உரையினை கணித்து (predicts the text response) அதற்கேற்றார் போல‌ பதில் மற்றும் பொதுவான சொற்றொடர்கள் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குகிறது. இந்த அம்சமானது, லின்ங்கிட் இன் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர்களில் காண‌ப்படும் பரிந்துரை உரைகளைப் போன்ற‌ நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. சில வாரங்களில் இவ் வசதி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gmail இன் ஸ்மார்ட் கம்போஸை எவ்வாறு செயலாக்குவது. (How to activate Gmail’s Smart Compose)

Gmail இன் புதிய பதிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். You will have to use Gmail’s newest version. இதை செய்ய, செட்டிங்ஸை (settings tab) கிளிக் செய்து முதல் விருப்பத்தை தேர்வு செய்யவும்: "Try the new Gmail."
புதிய ஜிமெயில் UI ஏற்றப்பட்ட பிறகு, மீண்டும் செட்டிங்ஸை (settings tab) கிளிக் செய்து, 'settings' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது general tab கீழ், "‘Enable experimental access" (பரிசோதனை அணுகலை இயக்கு) என்று குறிப்பிடும் பெட்டியினை தெரிவு செய்யவும். சரிபார்க்கும் பெட்டியை சொடுக்கிய பின், கீழே , "save changes" (மாற்றங்களைச் சேமி) என்ற பொத்தானை அழுத்தவும். அவ்வளவு தான் - நீங்கள் ஜிமெயிலின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை செயல்படுத்தியுள்ளீர்கள்.
இப்போது புது மின்னஞ்சலை நீங்கள் தட்டச்சு செய்யும் போதெல்லாம், உங்கள் வாக்கியத்திற்கான பரிந்துரைகளை Google வழங்கும். ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும், மற்றும் புது மேம்படுத்தல்கள் மென்மேலும் வெளிவர‌ இன்னும் முன்னேற்றங்களை பார்க்க வாய்ப்பு உள்ளது.

ஸ்மார்ட் கம்போஸ் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கம்போஸ் பதில்களை வழங்க வடிவமைக்கப்படவில்லை, மற்றும் எப்போதும் சரியான தகவலை சரியாக கணித்துவிடாது, " என்று கூகிள் அதன் பயனர்களை எச்சரிக்கிறது.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செட்டிங்ஸினை மாற்றி இவ்வசதியினை பெறுவதிலிருந்து விலகிக் கொள்ளலாம் . செட்டிங்ஸ்> ஜெனரல்> "‘Enable experimental access" (ப‌ரிசோதனைக்கான அணுகல்) பெட்டி தேர்வுதனை நீக்குவதால்.>