ஆப்பிளின் வாட்ச் 3 பெரிய மேம்படுத்தலுடன் வரும் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் அறிமுகம்.

Apple Watch 2
Gears

New Apple Watch, Apple watch 3 to Launch in Q3 of this financial Year.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் வாட்ச் 2 (Apple Watch 2 / ஸ்மார்ட் கைகடிகாரம் 2) இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. பெரும் வரவேற்பினைப் பெற்றதால்
இக் கடிகாரத்தின் புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் இறங்கியிருந்தது.

செவ்வாயன்று, சீன மொழியில் வெளியான‌ எக்கனாமிக் டெய்லி நியூஸ் பத்திரிக்கையில் ஆப்பிளின் அணியக்கூடிய‌ கருவியின் (wearable device) அடுத்தகட்ட‌ மறு செய்க்கையினை உருவாக்க தைவான் நாட்டைச் சார்ந்த குவாண்டா (Quanta) பொறுப்பினை ஏற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக‌, ஆப்பிளின் முதல் மற்றும் இரண்டாவது தலைமுறை ஸ்மார்ட் வாட்ச்களையும் ( Apple smartwatch ) தயாரிக்க‌ இந்நிறுவனமே உற்பத்தி பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஆப்பிளின் வாட்ச் 3 (Apple Watch 3) ஸ்மார்ட் வாட்ச் ஆனது வரும் நிதியாண்டின் 3 ஆம் காலாண்டில் அறிமுகம் ஆகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அம்சங்களையும் உள்ளடக்கி, குறிப்பிடத்தக்க கடிகார‌ வடிவமைப்பு மாற்றங்கள், இன்னும் மேம்பட்ட சென்சார்கள் என‌ ஆப்பிள் இப்புதிய‌ ஸ்மார்ட் வாட்ச்சினில் அறிமுகம் செய்யலாம் எனவும் புரளிகள் வெளியாகியுள்ளன‌..

ஆப்பிள் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட‌ காப்புரிமையில் (Apples Patent), இதய துடிப்பு மற்றும் தனிப்பட்ட கார்டியோ ஒழுங்கை கண்டுபிடிப்பதன் மூலம் ஒரு பயனரின் அடையாளத்தை தீர்மானிக்கும் திறன் (identify user identity through their heart rate and unique cardio rhythms) ஆனது எதிர்கால ஸ்மார்ட் கைக்கடிகார‌ பதிப்புகளில் சாத்தியமாகக் கூடும். மேலும் ஒரு மெல்லிய உடல் வடிவமைப்பினையும் கொண்டிருக்கும் என‌ தகவல்கள் தெரிவிக்கின்றன‌. ஆப்பிள் வாட்ச் 3 குறித்த‌ சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
.

நாள் : 05.01.2017 திருத்தம் : 05.01.2017