ஆப்பிளின் மிகை-யதார்த்த கண்ணாடிகள் : Apple AR Glasses

Imagine Apple-AR-Glasses
Gears

Apple is reportedly working on AR Glasses and tests its set of augmented reality glasses.

ஆப்பிள் உங்களது ஐபோன்களை இணைத்து படங்கள், தகவல்கள் மற்றும் இணைப்பு நிஜமாக்க‌ பொருட்களை காண்பிக்கும் டிஜிட்டல் கண்ணாடிகளை (Apple tests Digital Glasses) உருவாக்கி வருகின்றது (digital glasses that connects iPhone and display images, information and augmented reality content). புரியும்படி கூறவேண்டுமானல் இது கூஃகுள் நிறுவனத்தின் கூகுள் கிளாஸ் (Google Glass) போன்றதாகும்.

ஆப்பிள் இந்த டிஜிட்டல் கண்ணாடிகளை 2018 இல் சீக்கிரமாக‌ அறிமுகப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. டிஜிட்டல் காட்சிகள் தரும் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கென‌ காப்புரிமையினையும் இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐகிளாஸ் தொழில் நுட்பம் (Apple iGlass technology) தயாரிக்க‌ பல‌ நிறுவனங்களை கையகப்படுத்திக்கொண்டது. மைக்ரோசாப்ட் கைனெக்ட் இன் மோஷன் சென்சிங்க தொழில்நுட்பம் உருவாக்கிய பிரைம்சென்ஸ் (PrimeSense developed motion-sensing technology for Microsoft Kinect) மற்றும் இணைப்பு நிஜமாக்கம் தழுவிய‌ தொடக்க நிறுவன‌ங்களான (augmented reality based startups)) மெட்டாயோ (Metaio) ஃபிளைபை மீடியா (Flyby Media) போன்ற நிறுவனங்களை ஆப்பிள் வாங்கியது.

இதுபோல‌ மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஹாலோலென்ஸ் கலப்பு-யதார்த்த ஹெட்செட் வழியாக‌ ( Microsoft HoloLens mixed-reality headset) 3D மாடலிங் கருவிகள் போன்ற மேம்பட்ட பயன்பாடுகளுடன் இடைவினைபுரியும் ஹாலோலென்ஸ் கண்ணாடிகளை தயார் செய்ய‌ முன்னோக்கிச் செல்கிறது.

ஸ்னாப்சாட் கண்ணாடிகள், ஆப்பிளின் தொழில்நுட்பத்தை போன்று மேம்பட்டதாக‌ இல்லாவிட்டாலும் கண்ணாடிகளின் வழியே வீடியோ, கேம் ஷூட்டிங், மற்றும் புகைப்படத்திற்கான‌ போதிய‌ வெளிச்சம் அளிக்க‌ பயன்படுத்தப் படுகிறது.

ஏ.ஆர் தொழில் வளர்சிப் (Augmented Reality - AR industry growth) பாதையில் மைக்ரோசாஃப்ட் உடன் ஆப்பிள் நிறுவனமும் முன்னடி எடுத்துவைத்துள்ளதைப் பார்க்க சுவாரசியமாக‌ இருக்க கூடும்

நாள் : 18.11.2016 திருத்தம் : 18.11.2016

புதியவை / Recent Articles