போகிமான் வெர்ஷன் 2 : வருகிறது Pokemon Go Generation 2

Second Generation Pokemon GO
விளையாட்டு

‘Pokemon GO’ Updates: Second Generation

"போகிமான் GO" பிரியர்கள் செகன்ட் ஜென் போகிமான் டிசம்பர் 7 இல் வெளியீடு எனும் கிசுகிசுப்பினைக் கேட்டதும் குதூகலம் அடைந்துள்ளனர். சவுதி அரேபியா, ஈரான் நாடுகளிலும் இந்த‌ கேம் அறிமுகமாக‌ சாத்தியங்கள் உள்ளதால் இந்த‌ ஆக்மென்டட் ரியாலிட்டி கேமானது ("Augmented reality Game") மேலும் உற்சாகத்தைச் சேர்க்கிறது.

புதிதாக சேர்க்கப்பட்ட 100 போகிமான்களை (Pokemons) முழுமையாக இன்னும் நியான்டிக் நிறுவனம் (Niantic) அறிவிக்கவில்லை, இருப்பினும் பெயர்கள் ஏற்கனவே குறியீடுகள் வழியாக காணப்பட்டதாய் தகவல்கள் கூறுகின்றன‌. இதன் காரணமாக‌, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜென் 2 போகிமான் உயிரினங்களின் (Second generation Pokemon GO Creatures) கற்பனையானது வெளியீட்டு தேதியின் ஆர்வத்தினை மேலும் கூட்டியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட‌ போகிமான் கோ (Pokémon Go) மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளையும் படைத்துவிட்டது. இதில் கின்னஸ் சாதனையும் அடக்கம்.

GPS தொழில்நுட்பத்தனையும் (GPS Technology), மாயையான‌ தோற்றத்தினை உருவாக்கும் "Augmented reality" தொழில்நுட்பத்தினையும் தழுவி உருவாக்கப்பட்ட பொக்கிமான் கேம் (Pokemon game) அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்தினுள் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொக்கிமான் கேம் பல‌ பிரச்சினைகளையும் சந்தித்துள்ளது : விபத்துகள் காரணமாக‌ பல‌ நாடுகளில் தடை (Pokemon-GO Accidents) விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொக்கிமான் கேமிற்கு எதிராக‌ பல‌ நாடுகளில் எதிர்ப்புகளும் கிளம்பியிருந்தன‌.

இப்படி பல‌ பெயர்களைப் பெற்ற‌ Pokémon Go மீண்டும் புதிய வடிவில் Pokémon Go Generation 2 எனும் பெயருடன் பலவகை அம்சங்களைக் கொண்டு வெளியாக‌வுள்ளது. வ‌ரும் டிசம்பர் மாதம் 7ம் திய‌தி அறிமுகம் செய்யப்படும் என்கின்ற‌ எதிர்பார்புடன் கேம் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

நாள் : 23.11.2016 திருத்தம் : 24.11.2016