சோனியின் ப்ளேஸ்டேஷன் கேம் ஸ்ட்ரீமிங் சேவை லைவ் ஆக‌ பிசி பயனர்களுக்கு !

Sony’s PlayStation Now game streaming service is live for PC computer users

சோனியின் ப்ளேஸ்டேஷன் (Sony’s PlayStation Now) கேம் ஸ்ட்ரீமிங் சேவை (game streaming service) லைவ் ஆக‌ பீசி (live for PC users) பயனர்களுக்கு ! . அண்மையில், சோனி பிளேஸ்டேஷன் நௌ (PlayStation Now), கேம் ஸ்ட்ரீமிங் சேவையினை (game streaming service) பீசீக்களுக்கு (PCs) கொண்டு வருவதாக‌ அறிவித்திருந்தது. இப்போது இச்சேவை மேலும் ஆறு கேம் த‌லைப்புகளுடன் கிடைக்கப்படுகிறது.

பீசி (PC) பயனர்கள் இச்சேவையைப் பெற‌ பதிவு செய்ய‌ வேண்டும், இதற்கான‌ கட்டணம் மாதத்திற்கு $ 19.99 அல்லது ஒரு ஆண்டுக்கு $ 99.99 ஆகும். மற்றும் விண்டோஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் (Windows App Download) செய்ய‌ வேண்டும்.

தற்போது இருக்கும் 400க்கும் மேற்பட்ட‌ PS3 கேம்களுடன் மேலும் ஆறு கேம்களை பிளேஸ்டேஷன் லைபிரரியில் இருந்து லைவ் ஸ்ட்ரீம் செய்து விளையாடலாம். புதிதாய் Mafia II, Tomb Raider Game of the Year Edition, Ni No Kuni: Wrath of the White Witch, Sid Meier’s Civilization Revolution, Heavy Rain (with The Taxidermist DLC) and Borderlands: Ultimate Edition, Castlevania: Harmony of Despair (அக்டோபரிலிருந்து), என‌ ஆறு கேம்கள் சேர்க்கப்பட்டுள்ள‌ன‌..

நீங்கள் உங்களது கணினியில் பிளேஸ்டேஷன் முயற்சி செய்துள்ளீர்களா? நீங்கள் சந்தாதாரராகும் முன்னர் இப்போது பிளேஸ்டேஷனை சோதிக்க இலவசமாக‌ 7 நாள் சோதனை (7-day trial) நாள் உள்ளது.

நாள் : 31.08.2016 திருத்தம் : 31.08.2016

புதியவை / Recent Articles