போக்கிமான் கோ உலக சாதனைகள்
போக்கிமான் கோ (Pokémon GO) வெளியிடப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு இன்னமும் இந்த விளையாட்டின் மீதுள்ள விளையாட்டு வெறி போகவில்லை. வெளி நாடுகளில் பட்டையக்கிளப்பிவரும் போக்கிமான் கோ (Pokémon GO) விளையாட்டு படைத்த இமாலயச் சாதனைகள் கின்னஸ் ரெக்கார்டாக மாறியுள்ளன. (Guinness record).
முதல் மாதத்திலேயே, முதன்முறையாக, ஒரு மொபைல் விளையாட்டால் (Mobile Gaming App) ஈட்டப்பட்ட பெருமளவு வருவாய்.
முதல் மாதத்திலேயே, அதிகளவில் டவுண்லோடு செய்யப்பட்ட மொபைல் கேம்.
சர்வதேச அளவில், முதல் மாதத்திலேயே, ஒரே நேரத்தில், அதிகளவில் டவுண்லோடு செய்யப்பட்டடு முதலிடத்தினைப்பிடித்த மொபைல் கேம்.
சர்வதேச அளவில், முதல் மாதத்திலேயே, ஒரே நேரத்தில் அதிக அளவு வருமானத்தினை ஈட்டி முதலிடத்தினைப்பிடித்த மொபைல் கேம்.
அதிவேகத்தில் $100 மில்லியன் வருமானத்தினை எட்டிய மொபைல் கேம் (20 நாட்களிலேயே). முதல் மாதம் நிறைவில் சுமார் 206.5 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது.