நாசாவின் மார்ஸ் ரோவர் கேம்

Gears

NASA has released a free game that lets players try their hand at driving the Curiosity Mars rover.

நாசா (NASA) தனது செவ்வாய் ஆய்வு வாகனத்தினை (Mars Exploration Vehicle) நினைவுகூரும் வகையில் புதுவித‌ இலவச விளையாட்டு ஒன்றினை "மார்ஸ் ரோவர் (Mars Rover)" என்ற‌ பெயரில் வெளியிட்டது.

நாசா (NASA) நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் கடந்த 2012ம் ஆண்டில் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity rover) எனும் விண்கலத்தினை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியிருந்தது.

இந்த‌ விண்கலம் செலுத்தப்பட்டு இவ்வாண்டுடன் 4 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன‌. இந்நிகழ்வினைக் கொண்டாடும் வகையில் Mars Rover எனும் ஆன்லைன் கேமினை (Mars Rover Game) நாசா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இலவசமாக கிடைக்கக்கூடிய‌ "மார்ஸ் ரோவர் (MARS ROVER)" கேமினை ஆன்லைனில் மட்டுமன்றி ஆப்பிள் (Apple) மற்றும் ஆண்ட்ராய்ட் கருவிகளிலும் (Android Devices) இன்ஸ்டால் செய்து (நிறுவி / Install ) பயன்படுத்த முடியும்.

மேலும் 2020ம் ஆண்டளவில் கியூரியோசிட்டி ரோவர் 2 (Curiosity Rover 2) எனும் மற்றுமொரு விண்கலத்தினை செவ்வாய் (space shuttle) கிரகம் நோக்கி அனுப்பவுள்ளதெனும் புதிய தகவலினையும் நாசா வெளியிட்டுள்ளது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் இதுவரை 13.5 கிலோ மீட்ட‌ர்கள் தூரம் பயணித்துள்ளதுடன், சுமார் 128,000 புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் : 08.08.2016 திருத்தம் : 10.08.2016

புதியவை / Recent Articles