YouTube reminds you to stop watching YouTube Videos
Gadgets

Now YouTube reminds you to stop watching YouTube Videos - newest feature.

கூஃகிள் (Google), டிஜிட்டல் நன்மையினை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்க்க‌ (less distracted by technology) உதவுகிறது. இதன் முன்முயற்சி அடையாளமாக‌ யூட்டியூபில்-வீடியோக்கள் பார்ப்பதனை நிறுத்தம் செய்வதற்கான‌ நினைவூட்டல்கள் YouTube இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆம்: யூடியூப்பை பார்ப்பதை நிறுத்த YouTube இப்போது உதவும். இருப்பினும், இயல்புநிலையில் இந்த‌ அம்சம் இயங்காது என்றாலும் இது ஒரு நல்ல சைகை ஆகும். உங்கள் ப்ரோஃபைல் ஐகானைத் தட்டுவதன் மூலம் நினைவூட்டல்களைப் பெறலாம். முதலில் ப்ரோஃபைல் ஐகான்> பின்னர் Settings > General > Remind me to take a break. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அல்லது ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் இடையில் நீங்கள் நினைவூட்டல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் சில பயனுள்ள மாற்றங்களையும் கூஃகிள் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் (தூங்கும் நேரங்களில்) அறிவிப்புச் சத்தத்தினை முடக்கம் செய்யும் (disable notification sounds) அம்சமும் உள்ளது .

இத்தகைய‌ அம்சங்கள் இதுவரை அனைத்து கருவிகளிலும் செயல்படுத்தப்படவில்லை. சிறு மாற்றங்களே, ஆதலினால் குறுகிய‌ காலத்தில் அனைவரும் இந்த‌ YouTube நினைவூட்டல்களைப் பெறலாம்.