Youtube Music -a streaming music service coming soon
Gadgets

YouTube’s Youtube Music -a streaming music service coming soon

யூடியூப் மியூசிக்கை அறிமுகப்படுத்துவதாக YouTube அறிவித்துள்ளது (Youtube Music streaming music service coming soon). YouTube இன் "இசைவெள்ளம்" - சேவை அடுத்த வாரம் மே 22 அன்று தொடங்குகிறது. இலவசமாகவும் மற்றும் பணம் செலுத்தியும் இலட்சக் கணக்கான இசை தடங்கள் மற்றும் வீடியோக்களை YouTube Music இல் கேட்டு, கண்டு மகிழலாம்.

ஆல்பங்கள் முழுதுமாக, கவர்கள், ரீமிக்ஸ், லைவ் பதிப்புகள் மற்றும் கலைஞர் வானொலி நிலையங்கள் ஆகியவற்றை நீங்கள் யூடியூப் மியூசிக் (YouTube Music) இன் புதிய மொபைல் மற்றும் டெஸ்க்டாப் செயலிகளில் (Mobile / Desktop App) இரசிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. புது செயலியில் உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்குவதன் மூலம், முகப்புத் திரையில் நீங்கள் விரும்பக்கூடிய பாடல்கள் மற்றும் உங்கள் இசனைக்கேற்ற / தெரிவுசெய்யப் பட்ட பாடல் பட்டியல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் பிளேலிஸ்ட்களையும் (Playlists) பரிந்துரைக்கின்றது.

Google Play மியூசிக்கை, YouTube சார்ந்த சேவையுடன் மாற்றுவதற்காகவே கூஃகிள் (Google) இந்த முயற்சியினை எடுத்துள்ளது. புதிய மியூசிக் சேவையானது YouTube ஐ Spotify, ஆப்பிள் மியூசிக் (Apple Music), பண்டோரா, டீசர் (Deezer) மற்றும் அதன் சொந்த கூகிள் மியூசிக் இசை (Google Play Music) ஆகியவற்றிற்கு நிகர் போட்டியாக அமைக்கக்கூடும்.

யூடியூப் மியூசிக் (YouTube Music) , செவ்வாய், மே 22 அன்று அமெரிக்க, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிகோ மற்றும் தென் கொரியாவில் செயல்படுத்தப்படும். பின் தொடர்ச்சியாக ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, நோர்வே, ரஷ்யா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது கிடைக்கும். நமது நாட்டில் சேவை வரும் போது அறிவிப்பினை பெறுவதற்கு நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்.