How to Unlock Your iPhone While Wearing a Face Mask
Gadgets

Wearing a mask? Soon You can use Face ID and Apple Watch to unlock your iPhone

முகக் கவசம் அணிந்துள்ளீரா? உங்கள் ஐபோனைத் திறக்க நீங்கள் விரைவில் ஃபேஸ் ஐடி மற்றும் ஆப்பிள் வாட்சைப் பயன்படுத்தலாம்.

சென்ற‌ ஆண்டு, எல்லோரும் முகக் கவசம் அணியத் தொடங்கியபோது, ஐபோன்களைத் திறக்க ஆப்பிளின் ஃபேஸ் ஐடி அம்சத்தைப் (Apple‘s Face ID feature to unlock iPhones) பயன்படுத்துவது கடினமாகிவிட்டது. நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்கையில் ஐபோன் உங்களை உடனடியாகக் கண்டறிய,‌ கடவுக்குறியீடு திரையினை (passcode screen) கொண்டு வந்து அன்லாக்கிங் அம்சத்தினை வேகப்படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

unlock iPhone While Wearing a Face Mask

முகக்கவசம் அணிந்திருக்கையில் ஐபோன்களை எப்படி அன்லாக் செய்வது?

இப்போது, நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்கையில் ஃபேஸ் ஐடியுடன் ஐபோன்களைத் திறக்க (unlock iPhone While Wearing a Face Mask) ஆப்பிள் திட்டமிட்டுள்ளது - இதற்காக‌ உங்களுக்கு ஆப்பிள் வாட்ச் தேவைப்படும். எங்காட்ஜெட் தள‌ம் குறிப்பிட்டுள்ளபடி, புதிய iOS 14.5 டெவலப்பர் பீட்டா வெர்ஷனில் ( iOS 14.5 developer beta ) நீங்கள் அன்லாக் செய்யப்பட்ட‌ ஆப்பிள் வாட்சை அணிந்திருந்தால் இதனைச் செய்ய அனுமதிக்கிறது.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் : அங்கீகாரத்திற்காக உங்கள் ஆப்பிள் வாட்சுடன் (Apple Watch for authentication.) குறைந்த துல்லியமான ஃபேஸ் ஐடியுடன் உங்கள் ஐபோனைத் திறப்பதற்கான விருப்பத்தை செயல்படுத்த வேண்டும்.
உங்கள் ஐபோனை வெற்றிகரமாக அன்லாக் செய்யும்போதெல்லாம் உங்கள் ஆப்பிள் வாட்சில் உங்களுக்கு அறிவிக்கப்படும். நீங்கள் அடிக்கடி அன்லாக் செய்யும் வேளையில் அது எரிச்சலூட்டுவதாகத் தெரியும். ஆகவே முகக் கவசம் அணிந்திருக்கும்போது கடவுக்குறியீடு குத்துவது எளிதாய் காண‌ப்படும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.