கூகுள் மேப்ஸ் இப்போது சக்கர நாற்காலி வசதியுள்ளதா என்பதையும் காட்டுகிறது

Google-Maps-wheelchair-amenities
Gadgets

Now Google maps will allow You to find wheelchair accessibility information under the Amenities section when looking up any establishment in Maps

மேப்ஸில், சிறிய ஒரு அப்டேட் ஒன்றினைச் சேர்த்துள்ளது கூகுள். மக்களுக்கு மிகவும் பயனுள்ள சக்கர நாற்காலி வசதியானது அவர்கள் கூகுள் மேப்பில் தேடும் இடத்தினிலோ / கட்டிடத்தில் அல்லது உணவகங்களிலோ இருக்கின்றதா என்பதை குறித்த‌ விபரங்களையும் இப்போது காண்பிக்கத் தொடங்கியுள்ளது.

கூகுளின் இந்த‌ சேவைக்குத் தேவையான‌ விபரங்களை, உள்ளூர் வழிகாட்டிகள் தாங்கள் செல்லும் இடங்களைப் பற்றிய‌ கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் பெறப்படுகின்றது. மேலும், சராசரி செலவு மற்றும் பார்க்கிங் போன்ற விஷயங்களை குறிக்கும் தகவல்களையும் சேர்த்துக்கொண்டு கூகிள் அதன் மேப்ஸ் பயன்பாட்டினை மேம்படுத்திவருகின்றது.

நீங்கள் கூகுள் மேப்ஸ் இனில் எதாவது ஸ்தாபனம் / பொதுவிடம் பற்றி தேடும் போது வசதிகள் பிரிவின் () கீழ் சக்கர நாற்காலி வசதி உள்ளதா என்பதை அறிய முடியும், மற்றும் அதே திரையில் நீங்கள் தெரிந்து கொண்டவற்றையும் சேர்த்துக்கொள்ள‌ முடியும்.

மாற்றாக, நீங்கள் சென்ற இடங்களைப் பற்றிய‌ கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமானால், கூகுள் மேப்ஸ் உடைய‌ வலை மற்றும் மொபைல் வெர்ஷன்களில் உள்ள‌ மெனுவினில் காணப்படும் உங்கள் பங்களிப்பு (Your contributions’ section ) ' பிரிவில் சென்று பதிலளிக்க‌ முடியும்.

நாள் : 19.12.2016 திருத்தம் : 19.12.2016