அரசியல் ! புதிய ஃபேஸ்புக் கருவி அறிமுகம்

Facebook's new effort with new tools helps elected officials reach constituents and their people

பேஸ்புக் அரசியல்வாதிகளுக்கென்று ஒரு புது கருவியை உருவாக்கி உள்ளது. இதில் தங்களை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும். மேலும் அரசியல்வாதிகள் தங்களது தொகுதி மக்கள் எதனை அதிகமாக படிக்கின்றனர் என்றும் எதை அதிகமாக பகிர்ந்துகொள்கின்றனர் என்பதனைப்பற்றிய தரவு விபரத்தினை அறிந்துகொள்ள, ஃபேஸ்புக், வரும் நாட்களில் அனுமதிக்கும்

இவ்வகை இணையதள கருவியானது (Facebook's Tool for politicians) மக்களால் தேர்ந்தடுக்கப்பட்டு பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தொகுதி மக்களை நன்றாகப் புரிந்து கொண்டு நற்சேவை புரிவதற்கு வழிவகுக்கும் --- என ஃபேஸ்புக் நம்புகின்றது.

ஃபேஸ்புக் புதுமையான பேட்ஜ்களையும் ( பதக்கம்) அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது. தொகுதிவாரியாக, தாங்கள் அத்தொகுதிக்குட்பட்டு வசித்துவரும் வாக்குரிமம் பெற்ற உறுப்பினர் என்பதனை மக்கள் இந்த பேட்ஜ் மூலம் தெரிவித்துக்கொள்ளலாம். உறுப்பினர் பேட்ஜ்களை அவர்களின் பெயர் அருகில் காண்பிக்க உள்ளது.

பேட்ஜ்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை தங்களது தொகுதிக்குட்பட்ட மக்களை இலக்காய் கொண்டு ஒரு குறிப்பிட்ட பதிவுதனை (Targeted Facebook Post for politicians) பகிர்ந்துகொள்ள முடியும்.

பேட்ஜ்களைப் பெறுவதற்கு : பிரதிநிதிகளின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை தெரிவிக்கும்போது மட்டுமே பேட்ஜ்கள் தோன்றும், வேறு இடங்களில் நீங்கள் கருத்து தெரிவித்தால் பேட்ஜ்கள் இராது.

நாள் : 09.06.2017 திருத்தம் : 09.06.2017

புதியவை / Recent Articles