WhatsApp Payments To Arrive In India Later This Year
Gadgets

WhatsApp Payments To Arrive In India Later This Year

இந்தியாவில் ஆன்லைன் கட்டண சேவையை (India's online payment services) வாட்ஸ்அப் சில காலமாக முயற்சித்து வருகிறது, ஆனால் ஒழுங்குமுறை தடைகள் காரணமாக அதை பகிரங்கமாக வெளியிட முடியாமல் போனது. நாட்டின் பிரபல ரூபாய் நோட்டு (500,1000) தடை அமல்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியாவின் டிஜிட்டல் பேமண்ட்ஸ் துறை வளர்ந்து வருகிறது.மேலும் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) போன்ற உலகளாவிய நெறிமுறைகள் வழியாக‌ பணத்தை மாற்றுவது என்பது ஒருபோதும் இதுபோல‌ நேரடியானதல்ல.

கடந்த ஆண்டு, வாட்ஸ்அப் பேமன்ட்ஸ் (WhatsApp Payments) பீட்டா சேனல்கள் வழியாக ஒரு சில பயனர்களுக்கென‌ வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியாவின் விதிமுறைப்படி தரவு சேமிப்பகமானது முழுமையாக‌ உள்ளூர்மயமாக்கப்பட‌ல் வேண்டும். இதனால் உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் கூட, வாட்ஸ்அப்பை உடனடியாக தொடங்குவதைத் தடுத்தது.

இப்போது, வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவர் வில் காத்கார்ட் (WhatsApp's global head Will Cathcart ): பேஸ்புக்கிற்கு சொந்தமான சமூக செய்தி பயன்பாடு (Facebook-owned social messaging app) இந்த ஆண்டின் பிற்பகுதியில் வாட்ஸ்அப் பேமன்ட்ஸ்ஐ அறிமுகப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளார். வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்புவது போல பணத்தை எளிதாக அனுப்புவதே நிறுவனத்தின் நோக்கம் என்று காத்கார்ட் கூறினார்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.